SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

எதிராளியை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்....இங்கிலாந்துக்கு குரோஷியா அட்வைஸ்

2018-07-13@ 20:03:49

மாஸ்கோ: இங்கிலாந்து அணியும் குரோஷியா அணியும் அரையிறுதி ஆட்டத்தில் ஆடின. அப்போது இங்கிலாந்து மீடியாக்கள் குரோஷியா அணியை தவறாக மதிப்பிட்டு அசிங்கப்படுத்தியதாக குரோஷியா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான லுகா மோட்ரிச் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்
இது குறித்து  அவர் நிருபரிடம் கூறியதாவது:  இங்கிலாந்து பத்திரிகையாளர்கள், கால்பந்து பண்டிதர்கள் தொலைக்காட்சியில் பேசினர், பேசிக்கொண்டேயிருந்தனர். குரோஷியாவை குறைத்து மதிப்பிட்டனர். இது மிகப்பெரிய தவறு என்று இப்போது புரிந்திருக்கும். அவர்கள் பேசிய அத்தனைப் பேச்சையும் எங்களுக்கான ஊக்கமருந்தாக எடுத்துக் கொண்டோம். நாங்கள் அவர்கள் எழுதுவதையும் பேசியதையும் கவனித்துக் கொண்டிருந்தோம், அதன் பிறகு சரி இன்று யார் களைப்படைந்த அணி என்று காட்டுவோம் என்று உறுதிபூண்டோம். அவர்கள் விவேகமாக இருக்க வேண்டும், எதிராளியை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நாங்கள் களைப்படைந்த அணியல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தோம். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நாங்களே ஆதிக்கம் செலுத்தினோம். கூடுதல் நேரத்துக்கு முன்பே ஆட்டத்தை முடித்து அவர்களைக் காலி செய்திருக்க வேண்டும். எங்கள் கனவு நிறைவேறியது. குரோஷிய வரலாற்றில் இது பேசப்படும். நாங்கள் கர்வமாக உணர்கிறோம். இவ்வாறு கூறினார் மோட்ரிச். குரோஷியா அணியின் மற்றொரு வீரரான வ்ரசால்கோ, “இது புதிய இங்கிலாந்து. அவர்கள் தங்கள் நீண்ட பாஸ்களை ஆடுவதில் மாறிவிட்டனர், லாங் பால்களை எடுப்பதில் மாற்றம் கண்டுவிட்டனர் என்று பொதுவாகப் பேசப்பட்டது, ஆனால் நாங்கள் அழுத்தம் கொடுக்கக் கொடுக்க அவர்கள் அவ்வாறு மாறிவிடவில்லை என்பது தெரிந்தது” என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்