SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

களைகட்டும் பாக்., தேர்தல் களம் : அடுத்து ஆட்சியை பிடிக்க போவது யார்..?

2018-07-13@ 19:48:53

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போது தேர்தலுக்கான பிரச்சாரம் களை கட்டியுள்ள நிலையில் அங்கு அடுத்து ஆட்சியை பிடிப்பது யார் என்ற போட்டி தீவிரமடைந்துள்ளது. 25-ம் தேதி 4 மாகாண சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் நவாஸ் ஷெரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வியூகம் வகுத்து தீவிரமாக களமிறங்கியுள்ளது. ஆனால் நவாஸ் ஷெரிப் ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் பொது தேர்தலில் நவாஸ் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சிக்கும், முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் மக்கள் கட்சி மற்றும் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் இளைய வாரிசாக பெனாசிரின் மகன் பிலாவல் களத்தில் உள்ளார். இருப்பினும் அனுபவமின்மையால் அவருக்கு செல்வாக்கு குறைந்தே காணப்படுகிறது. பிலாவலுக்கு போட்டியாக கருத்தப்பட்ட நவாஸின் மகள் மரியம் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. ஆட்சியை கைப்பற்ற இதுவே சரியான நேரம் என இம்ரான் கான் தீவிரமாக களமிறங்கியுள்ளதால் அந்நாட்டு தேர்தல் களம் களை கட்டியுள்ளது.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

  • manohar_cm12

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்