SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோழவரம் அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள மரகத முருகன் சிலை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

2018-07-13@ 17:16:53

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான மரகத முருகன் சிலை திருடப்பட்டுள்ளது. அலமாதி பகுதியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவக்குமாருக்கு சொந்தமான முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலை 40 ஆண்டுகளாக அதிகாரி சிவக்குமார் பராமரித்து வருவதாக கூறப்படுகிறது. பூமிக்கு அடியில் கிடைத்த மரகத சிலையை கோயிலில் வைத்து வழிப்பட்டு வந்ததாகவும், அதன் பின்னர் இந்த கோயிலை விரிவுபடுத்தி பொரியதாக கட்டியதாகவும் சிவக்குமார் கூறியுள்ளர்.

இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கோயிலுக்கு சென்றபோது, அங்கு முருகன், வள்ளி, தெய்வாணை சிலைகளுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த மரகத முருகன் சிலையும் வெள்ளி வேலும் காணாமல் போனது தெரியவந்துள்ளது. மேலும் இன்று காலை 7 பேர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்ற பிறகே சிலை காணாமல் போனதாக சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்