SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விண்வெளி சுற்றுலா போகணுமா....ரூ.1.5 கோடி இருந்தால் போதும்!

2018-07-13@ 15:35:26

வாஷிங்டன்: விண்வெளி சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசின் புளூ ஆர்ஜின் நிறுவனம், அதற்கு கட்டணமாக இந்திய மதிப்பில் ஒன்றரை கோடி ரூபாய் முதல் ரூ.2 கோடி வரை கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது. மேற்கு டெக்ஸாசில் உள்ள புளூ ஆர்ஜின் நிறுவனம் விண்வெளிக்கு பொதுமக்களும் பயணம் செய்யக்கூடிய அளவுக்கு கேப்சூல் வகை விண்கலத்தை தயார் செய்து வந்தது. இந்த விண்கலம் மிகப்பெரிய ஜன்னல்கள் வடிவமைப்புடன் அமைந்துள்ளது. 2.4 அடி அகலம், 3.6 அடி உயரம் கொண்டதாக உள்ளது.

இதில் 6 இருக்கைகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக விண்கலம் எந்த இடத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை அறியும் வகையில் தனித்தனி திரை வைக்கப்பட்டுள்ளது. அவசரமான காலங்களில் பயணிகள் பாராசூட் முறையில் தப்பிக்கும் வகையிலான வசதியும் செய்யப்பட்டுள்ளது. நியூ ஷெப்பர்ட் என்று பெயரிடப்பட்டுள்ள விண்வெளி வாகனம் அடுத்தவருடம் தன்னுடைய பயணத்தை துவக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதற்கான கட்டணம் எவ்வளவாக இருக்குமென அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்