SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லண்டனில் இருந்து வரும் வழியிலேயே நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகளை கைது செய்ய திட்டம்

2018-07-13@ 14:05:22

லண்டன்: ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நாடு திரும்பும் வழியிலேயே கைது செய்யு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனில் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் மனைவி குல்சூமை பார்க்க சென்ற நவாஸ் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் இன்று பாகிஸ்தானுக்கு திரும்ப உள்ளனர். அவர்களை கைது செய்ய இஸ்லமாபாத் மற்றும் லாகூர் விமான நிலையங்களில் தேசிய பொறுப்புடைமை முகமை காவலர் குழு தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நவாஸ் கைது செய்யப்படும் போது பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற பரபரப்பு, சர்ச்சைகள் தவிர்த்து நவாஸை கைது சிறையில் அடைக்க அவரையும், அவரது மகளையும், நாடு திரும்பும் வழியில் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபி விமான நிலையத்தில் கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனில் சொகுசு வீடுகள் வாங்கிய விவகாரத்தில் நவாஸ் ஷெரீப்பிற்கு 10 ஆண்டுகளும், மரியம் நவாஸிற்கு 7 ஆண்டுகளும் தண்டனை விதித்து பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்