SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

16-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : பாஜக உறவு குறித்து முக்கிய ஆலோசனை?

2018-07-13@ 12:18:38

சென்னைூ சென்னையில் 16-ம் தேதி வரும் திங்களன்று நடைபெற உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியுடனான உறவு, நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒன்றாக தலைமை வகிக்க உள்ளனர். அதிமுகவிற்கு உறுப்பினர்கள் சேர்த்தல், புதுப்பித்தல் விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. மாவட்ட செயலாளர்கள் பலர் மீது கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

எனவே இந்த விவகாரம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் பாரதிய ஜனதா கட்சியுடனான உறவு குறித்தும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது பற்றியும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் 18-ம் தேதி தொடங்க உள்ளதால் அதிமுக எம்.பி.க்கள் கூட்டமும் திங்களன்றே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்