SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பலி: பலர் படுகாயம்

2018-07-13@ 12:04:52

ஷாங்காய்: சீனாவில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் பரவிய தீயால் எங்கும் புகைமூட்டம் காணப்பட்டது. இதனிடையே ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து காரணமாக பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு சீனாவின் டியாஜின் மாகாணத்தில் ஆலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 165 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. சீன அரசு தொழில்துறை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக (குறிப்பாக நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் இரசாயன ஆலைகள்) பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இவ்விபத்து நடந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்