SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலா தேவி மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்

2018-07-13@ 10:56:51

விருதுநகர்: பேராசிரியை நிர்மலாதேவி மீது விருதுநகர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது. 1160 பக்க குற்றப்பத்திரியை சிபிசிஐடி போலிசார் தாக்கல் செய்துள்ளனர். மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, இவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மற்ற குற்றவியல் வழக்குகளை போன்றது அல்ல இது.

முக்கியத்துவம் வாய்ந்தது. மிகப்பெரும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்ட தமிழ் சமூகத்தின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது. பெற்றோருக்கு அடுத்தபடியாகவும், கடவுளுக்கு மேலாகவும் ஆசிரியர்களை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கிறோம். ஆனால், இந்த வழக்கில் உயர்வாக பார்க்கப்படும் ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த சம்பவம் முழுக்க இளம் மாணவிகளை குறி வைத்தே நடந்துள்ளது. அதேநேரம் இவர்கள்தான் குற்றவாளிகள் என்ற முடிவுக்கும் வரமுடியாது. வழக்கின் விசாரணை முடிந்தால்தான் முழு விபரங்கள் தெரியும்.

குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் கல்வித்துறையை சார்ந்தவர்கள். தற்போது சிறையில் உள்ளனர். இவர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  தடயவியல் துறை உள்ளிட்ட வழக்கிற்கு தேவையான அறிக்கைகளை, 30 நாட்களுக்குள் சிபிசிஐடி போலீசாருக்கு வழங்க சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் 16ம் தேதிக்குள் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று சிபிசிஐடி போலீஸ் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்