SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கும்பகோணம் அருகே 20 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் கேட்டு அலையும் பழங்குடியின மக்கள்!

2018-07-13@ 10:45:07

தஞ்சை: கும்பகோணம் அருகே கடந்த 20 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் பள்ளிப்படிப்பபை பாதியிலேயே நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பழங்குடியின மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் ஆதியின் இனத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் வழங்கவில்லை என்றும் சாதிச் சான்றிதழ் வாங்க நடயாய் நடந்தும் கிடைக்காததால் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்துவிட்டு கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சாதிச் சான்றிதழ் இல்லாததால் பள்ளிக் கல்லூரிகளில் படித்து வரும் பிள்ளைகள் மேல் படிப்பை தொடர முடியாமல் தவிப்பதாகவும், சாதிச் சான்றிதழ் கேட்டு கோட்டாச்சியர் முதல் ஆட்சியர் வரை மனுக் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவிலை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து கும்பகோணம் கோட்டாசியர் பேசிய போது, தற்போது வரை தனது கைக்கு மனு வரவில்லை என்றும் பழங்குடியின மக்கள் மனு கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்