SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கோவையில் பேரிடர் பயிற்சியின்போது மாணவி பலியான விவகாரம்: 'அஜாக்கிரதையாக செயல்படுதல்' பிரிவின் கீழ் பயிற்சியாளர் கைது

2018-07-13@ 10:27:19

கோவை: பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது இரண்டாவது மாடியில் இருந்து பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் கோவை கல்லூரி மாணவி தலையில் அடிபட்டு பலியானார். இந்நிலையில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை இன்று காலை போலீசார் கைது செய்தனர். அஜாக்கிரதையாக செயல்படுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவை நரசீபுரத்தில் இயங்கி வரும் கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டுதோறும் என்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முகாம் 3 குழுக்களாக நேற்று தொடங்கியது. திருநெல்வேலியை சேர்ந்த தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகம் தலைமையில் 3 பேர், மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். கல்லூரியில் உள்ள 3 மாடி கட்டிடத்தின் 2வது மாடியில் இருந்து கீழே குதிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் 7 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

2வது மாடியில் இருந்து பயிற்சியாளர் ஆறுமுகத்தின் ஆலோசனைப்படி மாணவர்கள் கீழே குதிக்க வேண்டும். அப்படி குதிக்கும் மாணவர்களை பிடித்துக்கொள்ள, 20 மாணவர்கள் கீழே வலையை பிடித்துக்கொண்டு தயாராக இருந்தனர். இதில் 4 மாணவர்கள் 2வது மாடியில் இருந்து குதித்தனர். அவர்கள் வலையில் விழுந்து பத்திரமாக தப்பினர். இதையடுத்து, 2ம் ஆண்டு பிபிஏ படிக்கும், நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்த நல்லாகவுண்டரின் மகள் லோகேஸ்வரி(19) பயிற்சிக்காக குதிக்க வந்தார். மாணவி லோகேஸ்வரி கீழே குதிக்க தயங்கியதால் பயிற்சியாளர் ஆறுமுகம் தைரியம் ஏற்படுத்தி கீழே குதிக்கக் கூறினார். இருந்தாலும் தயங்கி கொண்டே இருந்த மாணவியை திடீர் என பயிற்சியாளர் ஆறுமுகம் பிடித்து கீழே தள்ளினார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத லோகேஸ்வரி கீழே விழும்போது முதல்மாடி சன்ஷேடில் தலை மோதி, வலையில் ரத்தவெள்ளத்தில் விழுந்தார். இதில், சன்ஷேடில் தலை மோதியதில் தலை மற்றும் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. இதை பார்த்து அங்கிருந்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்து கதறி துடித்தனர். உடனடியாக மாணவியை மீட்டு, தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே மாணவி உயிரிழந்ததார். இந்நிலையில் மாணவ, மாணவியருக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மாணவியின் உயிரிழப்புக்கு காரணமான பயிற்சியாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது மாணவி குடும்பத்தினரது கோரிக்கை ஆகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

 • florence&trumph

  பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

 • greenlandicemelt

  கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

 • thirupathilast

  திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்