SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

குடல் உபாதையை சீர்செய்யும் மாதுளை

2018-07-13@ 10:08:00

மற்ற பழங்களை விட எளிதில் ஜீரணிக்கக் கூடியது மாதுளை. ஆயுர்வேத மருத்துவ முறைப்படி மாதுளையில் இருந்து தாதிமஷ்டாக் சூரணம், தாதிமாவலே போன்ற மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. சூரணம் பசி உணர்வைத் தூண்டும். குடல்வலியில் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த பழம். நாள்பட்ட வயிற்றுக்கடுப்பைக் தீர்க்க தாதிமாவலே உதவும். இதன் மரம், வேர், கிளை, இலை, பூ, புறணி, விதை என்று அனைத்துப்பகுதிகளும் மருத்துவத்தன்மை உள்ளது. இருதயம், ஈரல், சிறுநீரகங்களின் இயக்கங்களை ஊக்குவிக்கும். சளி, குடல் உபாதை உள்ளவர்கள் இதை உண்ணலாம்.

அதிகளவில் பேதியாகி பலவீனமற்ற நேயாளிகளுக்கு திரும்ப திரும்ப 50 மிலி. மாதுளம் பழச்சாறு கொடுத்து பருகச் செய்யலாம். தாகம் தணிக்க மாதுளம் பழச்சாறுடன் சிறிதளவு குங்குமப்பூ கலந்து கொடுக்க வேண்டும். உடலில் சிவந்த புள்ளிகள் தோன்றும் நச்சுக்காய்ச்சல் இரைப்பை மற்றும் ஆஸ்துமா தொடர்பான பாதிப்புகளுக்கு மாதுளை சர்பத் கொடுக்கலாம். வேரின் புறப்பகுதி காய்ச்சலைத் தடுக்க உதவும். கொள்ளு கசாயத்தில் ஒரு கரண்டி மாதுளை விதை அரைத்து பசையாக்கினதைக் கலந்து கொடுக்கலாம். சிறுநீரக கற்கள் கரைந்து விடும். தொடர்ந்து உண்டு வந்தால் ஈறுகள் வலுப்பெறும். ரத்தக்கசிவு நிற்கும். பயோரியாவைத் தடுக்கும். பற்களை பளிச்சிட வைக்கும்.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்