SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாவமன்னிப்பு கேட்ட பெண் பலாத்காரம் தேடப்பட்ட பாதிரியார் போலீசில் சரண்

2018-07-13@ 03:09:39

திருவனந்தபுரம் : பாவமன்னிப்பு கேட்க வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வந்த ஒரு பாதிரியார் போலீசில் சரணடைந்தார். கேரளாவின் பத்தனம்திட்டா மல்லப்பள்ளியை சேர்ந்த இளம்பெண் பாவ மன்னிப்புக் கோரி சர்ச்சுக்கு சென்றார். அங்கிருந்த பாதிரியார் அவரை மிரட்டி தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். இதுகுறித்து அறிந்த மேலும் 4 பாதிரியார்களும் அந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பான புகாரையடுத்து பாதிரியார்கள் ஜோப் மேத்யூ, ஜெய்ஸ் கே.ஜார்ஜ், ஆபிரகாம் வர்க்கீஸ், ஜாண்சன் வி.மேத்யூ ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

4 பாதிரியார்களும் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த மனு தள்ளுபடி  செய்யப்பட்டது. இந்நிலையில் பாதிரியார் ஜோப் மேத்யூ கொல்லம் கிரைம் பிராஞ்ச் டிஎஸ்பி முன்னிலையில் நேற்று காலை சரணடைந்தார். அவரை மருத்துவ பரிசோதனைக்காக திருவல்லா அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அவர் திருவல்லா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். பாதிரியார்கள் ஜெய்ஸ் கே. ஜார்ஜ், ஆபிரகாம் வர்க்கீஸ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்