SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதியில் மர்ம கவரால் வெடிகுண்டு பீதி

2018-07-13@ 03:08:57

திருமலை : திருப்பதி கோயில் கல்யாண கட்டா அருகே கிடந்த மர்மக் கவரால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலை யாத்ரீக சமுதாய கூடம் 4ல் கல்யாண கட்டா (தலைமுடி காணிக்கை செலுத்தும் இடம்) உள்ளது.  இதன் அருகே நேற்று காலை ஒரு மர்மக் கவர் கிடந்தது. அந்த கவரை அங்கிருந்த பக்தர்கள் யாரும் எடுக்காத நிலையில், அதில் வெடிகுண்டு இருக்குமோ என்று பக்தர்களிடையே பீதி ஏற்பட்டது. இதுகுறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய், வெடிகுண்டு கருவிகளுடனும் அந்த கவரை சோதனை செய்தனர். இதில் அந்த கவரில் வெடிகுண்டு எதுவும் இல்லாதது தெரியவந்து நிம்மதியடைந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்