SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தகவல் உரிமை சட்டத்தில் பிசிசிஐ ஏன் வரவில்லை? மத்திய அமைச்சகம் பதில் அளிக்க உத்தரவு

2018-07-13@ 03:08:21

புதுடெல்லி : தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பிசிசிஐ ஏன் வரவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு தகவல் உரிமை ஆணையர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சமூக நல ஆர்வலர் கீதா ராணி என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ‘எந்த அடிப்படையில் இந்தியாவின் சார்பில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வீரர்களை அனுப்பி வைக்கிறது?, இந்தியா முழுவதும் வீரர்களை தேர்வு செய்ய எந்த அடிப்படையில் பிசிசிஐ.க்கு அனுமதி வழங்கப்பட்டது?, அப்படி அனுமதி வழங்கப்பட்டு இருந்தால், சர்வதேச போட்டிகளில் நாட்டின் சார்பில் தனியார் அமைப்பில் இருந்து வீரர்கள் பங்கேற்க அனுமதி அளித்தது எப்படி? இந்த உரிமையை கொடுத்ததால் மத்திய அரசுக்கு கிடைத்த பயன் என்ன? என்பது உள்பட 12 கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அந்த கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் அளித்த பதிலில், ‘எங்களிடம் எந்த ஒரு தகவலும் இல்லை. ஏனெனில், பிசிசிஐ பொது அமைப்பு அல்ல. எனவே, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அது வராது. மேலும், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளை பிசிசிஐ அமைப்புக்கு அனுப்பி வைக்க முடியாது’ என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, அவர் மத்திய தகவல் ஆணையத்தில் இந்த கேள்வி குறித்து பதில் அளிக்கும்படி மனு அளித்தார். இந்த மனுவை பரிசீலித்த மத்திய தகவல் ஆணையர்தர் ஆச்சார்யலு, இதுகுறித்து பதில் அளிக்கும்படி மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது; தகவல் உரிமை சட்டத்தின் கீழ் ஏன் பிசிசிஐ வரவில்லை? பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளுக்கு பின்னரும், சட்ட அமைச்சகத்தின் அறிவுரைக்கு பின்னரும் ஏன் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பிசிசிஐ அமைப்பை கொண்டு வர மத்திய அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவில்லை?  

பிசிசிஐயில் உள்ள வெளிப்படையில்லா தன்மை, எந்த ஒரு நடவடிக்கைக்கும் சரியான பதில் கூறாத நிலை, சட்ட காரணங்களை தெரிவிக்காமல் இருப்பது ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வர மத்திய தகவல் உரிமை ஆணையம் நேரடியாக தலையிட்டுள்ளது. ஏனெனில், மனுதாரரின் கேள்வி இங்கு மிகவும் முக்கியமானது. இது இந்திய அணியா அல்லது பிசிசிஐ அணியா  என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனவே பொதுநலன் கருதியும், நேர்மையான கிரிக்கெட் விளையாட்டிற்காகவும், அணியில் விளையாடும் வீரர்கள் நேர்மையான முறையில் தேர்வு செய்யப்படவும், பிசிசிஐ வெளிப்படைத் தன்மையுடனும், சட்டத்திற்கு உட்பட்டதாகவும் தகவல் உரிமை சட்டத்திற்கு பதில் சொல்லக்கூடிய ஒரு அமைப்பாகவும் மாற வேண்டும். எனவே, இதுதொடர்பான விளக்கத்தை மத்திய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்