SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளைஞர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் : பிரதமர் மோடி வேண்டுகோள்

2018-07-13@ 03:06:42

புதுடெல்லி ; ‘‘இளைஞர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி அளித்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். மத்திய தொல்லியல் துறைக்கு டெல்லியில் தனி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது: நமது நாட்டின் தொல்லியல் துறையின் பாரம்பரியத்தையும், புகழையும் பாதுகாக்க பொதுமக்கள் பங்களிப்பு அவசியம். ஏனெனில், மக்கள் இதனால் பெருமையடையவில்லை என்றால் அரசுகளால் அதை பாதுகாக்க முடியாது. எனவே, நமது தொல்பொருள் மரபை பாதுகாக்க பெரு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

அதில் பொதுமக்கள் சில மணி நேரமாவது தன்னார்வ தொண்டர்களாக பணியாற்ற வேண்டும். நமது நாட்டில் உள்ள வரலாற்று இடங்களில் 100 இடங்களையாவது பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்த்து, உள்ளூர் தொல்பொருள் தகவல்களையும் அதில் இணைத்து மாணவர்களை படிக்க வைத்தால் அவர்கள் அதை மிக எளிதாக கற்றுக்கொள்வார்கள். மேலும், இளைஞர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி அளிக்க வேண்டும். அதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். மேலும், அந்த தொல்லியல் துறை பகுதியில் உள்ள மக்களின் நலனையும் மேம்படுத்துவதன் மூலம் அந்த பகுதியில் சுற்றுலாவை வளர்ச்சி அடையச் செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

‘தடை விதிப்பது நியாயமல்ல’
விழாவில் மோடி மேலும் பேசுகையில், ‘‘தொல்லியல் நினைவுச் சின்னங்கள் அருகே சென்று பொதுமக்கள் புகைப்படம் எடுக்க அதிகாரிகள் தடை விதிப்பது எனக்கு மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது. தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப வசதிப்படி எங்காவது ஒரு இடத்தில் இருந்து செயற்கைகோள் மூலம் மிக எளிதாக இவற்றை படம் பிடிக்க முடியும். அப்படி இருக்கும் போது பொதுமக்கள் புகைப்படம் எடுக்க தடை விதிப்பது நியாயம் இல்லை’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்