SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனைவியுடன் சண்டை போட்டதால் 80 வயது தாயை அடித்து கொன்று புதைத்த மகன் : மயிலாடுதுறை அருகே கொடூரம்

2018-07-13@ 02:52:37

மயிலாடுதுறை : மனைவியுடன் சண்டை போட்ட 80 வயது தாயை அடித்து கொன்று புதைத்த மகனை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வாளவராயன்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (57). இவரது மனைவி பூசம் (55). இவர்களுக்கு 2 மகள்கள். இருவரும் திருமணம் ஆகி சென்றுவிட்டனர். இவர்களுடன் கலியமூர்த்தியின் தாய் உய்யம்மாள் (80) வசித்து வந்தார். உய்யம்மாளுக்கு வயதாகிவிட்டதால் அவரை மருமகள் உதாசீனப்படுத்தி வந்துள்ளார். சில சமயங்களில் உணவுகூட அளிப்பதில்லை. மனைவியுடன் சேர்ந்துகொண்டு கலியமூர்த்தியும் தாயை திட்டுவது வாடிக்கை. இந்தநிலையில் கடந்த 2 மாதமாக உய்யம்மாளை திடீரென்று காணவில்லை. முதியோர் ஓய்வூதியம் வாங்கி வந்தவர், 2 மாதமாக ஓய்வூதியம் வாங்க வராததால் அவருடன் ஓய்வூதியம் வாங்குபவர்கள் எங்கே உன் தாய் என்று கலியமூர்த்தியிடம் கேட்டுள்ளனர். அதற்கு ஊருக்கு போயுள்ளார் என்று கூறியுள்ளார். அவர் தனியாக வெளியூர் செல்லும் அளவுக்கு உடல் நலம் இல்லாதவர் என்பதால் ஊர் மக்கள் சந்தேகமடைந்தனர். மேலும், மாமியார் மருமகள் சண்டை நடந்துள்ளதால் ஊர் நாட்டாமை சுப்பையனிடம் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் மாலை, சுப்பையன் ஊர் மக்களுடன் சென்று உன் தாய் எங்கே என்று கலியமூர்த்தியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் ஏதேேதா சொல்லி சமாளித்து அனுப்பிவிட்டு, உடனடியாக திருநாள்கொண்டச்சேரி கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகனிடம் சரண் அடைந்து பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். அதில், அவர் தெரிவித்ததாவது: எனது தாய்க்கு வயதாகிவிட்டது. அவரால் தன் காரியங்களை பார்த்துக்கொள்ள முடியவில்லை. அவரை கவனிக்கவும் முடியவில்லை. இதற்கிடையே மாமியார், மருகமள் சண்டை அடிக்கடி நடந்தது. நானும் சமாதானம் செய்துவைத்தும் எந்த முடிவும் ஏற்படவில்லை. கடந்த 2 மாதத்திற்கு முன்பு இருவருக்கும் சண்டை நடந்தபோது என் அம்மாவை பிடித்து கீழே தள்ளினேன். கீழே விழுந்தவர் இறந்துவிட்டார்.

வெளியில் தெரிந்தால் கொலை குற்றத்தில் சிக்கிவிடுவோம் என்று கருதி, வளர்ப்பு ஆடு செத்துவிட்டது அதை புதைக்கப்போகிறேன் என ஊர் மக்களை நம்ப வைத்து அதற்காக ஒரு ஆட்டை  அடித்து கொன்று கொல்லை புறத்தில் குழி வெட்டினேன். ஆட்டை குழியில் போட்டபோது அதனுடன் என் தாயின் உடலையும் போட்டு புதைத்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, வி.ஏ.ஓ. சந்திரசேகர் அளித்த புகாரின்பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்தனர். நேற்று மாலை கலியமூர்த்தியை அழைத்து வந்த போலீசார் அவரது தாயின் சடலத்தை தோண்டி எடுத்தனர். மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர் மாமியார், மருமகள் சண்டையில் வயதான தாயை அடித்து கொன்று மகனே புதைத்த சம்பவம் கிராமத்தில் ேசாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

 • omancyclerace

  ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்