SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சம்பளமும் இல்லை, அசைவமும் இல்லையா? ஏர் இந்தியா விமானிகளுக்கு சைவ உணவு ஆர்டர் : பரபரப்பை ஏற்படுத்திய இமெயில்

2018-07-13@ 02:49:28

புதுடெல்லி : ஏர் இந்தியா விமானிகளுக்கு சைவ உணவு ஆர்டர் செய்யப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஒரே விதமான சம்பள விகிதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர்இந்தியா விமானிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விமானிகள் இந்த போராட்டத்தால் விமான சேவை முடங்கியோடு பயணிகளும் அவதிக்குள்ளாயினர். பின்னர் விமானிகள் பணிக்கு திரும்பினர். இந்நிலையில், கடந்த 10ம் தேதி ஏர் இந்தியா விமானிகள் அனைவருக்கும் சைவ உணவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பொதுவா விமானிகளுக்கு அவர்களுக்கு பிடித்தமான உணவு வழங்கப்படும். ஆனால், பயணிகளுக்கு வழங்குவதுபோல் அனைருக்கும் சைவ உணவு ஆர்டர் செய்தது, விமானிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், உடனடியாக சைவ உணவுக்கான ஆர்டர் செய்யப்பட்ட இமெயிலை ஏர் இந்தியா நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘விமான நிறுவனத்தின் கேட்டரிங் பிரிவு சார்பில் அனுப்பப்பட்ட இமெயிலில்,  விமானிகளுக்கு சைவ உணவு ஆர்டர் செய்யப்பட்டிருந்தது. பயணிகளுக்காக சைவ உணவு ஆர்டர் செய்யப்படுவது போல், விமானிகளுக்கு சைவ உணவு  ஆர்டர் செய்யப்பட்டுவிட்டது. இதனால் உடனடியாக அந்த இமெயில் ஆர்டர் ரத்து செய்யப்பட்டது’’ என்றனர். கடந்த ஒரு ஆண்டாக ஏர் இந்தியாவின் உள்ளூர் விமானங்களில் எகனாமி பிரிவில் பயணம் செய்யும்  பயணிகளுக்கு சைவ உணவு மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.8 கோடி சேமிக்கப்படுகின்றது. பிசினஸ் வகுப்பில் பயணம் செய்வோர் மற்றும் சர்வதேச விமானங்களில் பயணம் செய்வோருக்கு மட்டும் தேவைப்படுவோருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்