SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

66 ஆண்டுகள் நகம் வெட்டாததால் சாதனை முதியவருக்கு நிரந்தர ஊனமானது கை

2018-07-13@ 02:43:21

நியூயார்க் : 66 ஆண்டுகளாக நகத்தை வெட்டாததால் சாதனை முதியவரின் கை மற்றும் விரல்கள் நிரந்தர ஊனமானது. மகாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் சிலால் (82). இவர் பள்ளியில் படிக்கும்போது, இவரது ஆசிரியர் ஒருவர் தனது கையில் மிக நீளமாக நகம் வளர்த்திருந்தார். அவரது நகத்தை எதிர்பாராத விதமாக ஸ்ரீதர் உடைத்து விட்டார். கோபம் அடைந்த ஆசிரியர் ஸ்ரீதரை திட்டியுள்ளார். இதனால் சவாலாக தனது இடது கையில் கடந்த 1952ம் ஆண்டிலிருந்து நகம் வளர்க்கத் தொடங்கினார் ஸ்ரீதர். இவரது பெருவிரல் நகம் மட்டும் 197.8 செமீ நீளம் வளர்ந்தது. இடது கை விரல்களில் உள்ள நகங்களின் மொத்த நீளம் 909.6 செமீ. உலகில் இதுவரை யாரும் இந்த அளவு நீளத்துக்கு நகம் வளர்க்கவில்லை. இதனால், இவரது நகம் கடந்த 2016ம் ஆண்டு கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது.

வயதாகிவிட்டதால், வளர்த்த நகத்தை பாதுகாப்பது ஸ்ரீதருக்கு சிரமமாக இருந்தது. இதனால் தனது நகத்தை வெட்டி மியூசியத்தில் பாதுகாக்க விரும்பினார். இதற்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள ‘ரிப்ளேஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ மியூசியம் முன்வந்தது. இதற்காக புனேவிலிருந்து நியூயார்க் அழைத்துச் செல்லப்பட்டார் ஸ்ரீதர். இவரது நகத்தை வெட்டுவதற்காக மியூசியத்தில் ‘நகம் வெட்டும் விழா’ நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. அதில், தரின் நகங்கள் வெட்டப்பட்டு மியூசியத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டன. நகங்கள் வெட்டியபின் அவரது இடது கை மற்றும்  விரல்களை, மற்றவர்கள் போல் இயல்பாக விரித்து மடக்க முடியவில்லை. 66 ஆண்டுகள் வளர்த்த நகத்தை பாதுகாக்க தனது இடது கையை ஒரே நிலையில் வைத்திருந்ததால், அது நிரந்தர ஊனமாகிவிட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்