SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல் மங்களூர் எக்ஸ்பிரஸ் தப்பியது

2018-07-13@ 02:38:33

அரக்கோணம் : அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல் உடனடியாக கண்டுபடிக்கப்பட்டதால் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்திலிருந்து தப்பியது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையம் அருகே ஊழியர்கள் நேற்று மதியம் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, சென்னை - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்டு ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு  தகவல் கொடுத்தனர். ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ஆய்வு செய்தனர்.

இதற்கிடையில், சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் உடனடியாக, புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே  நடுவழியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் பகுதியில் தற்காலிகமாக பக்கவாட்டில் இரும்பு சட்டம் வைத்து கிளாம்ப் மூலம் இணைத்து சரி செய்தனர். இதையடுத்து வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் அரைமணி நேரத்திற்கு பிறகு காலதாமதமாக புறப்பட்டு  குறைந்த வேகத்தில் சென்றது. உரிய நேரத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் கண்டறியப்பட்டு   எக்ஸ்பிரஸ் ரயிலை ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்