SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உ.வே.சா கடிதங்கள் புத்தகமாக வெளியீடு : கவர்னர் புரோகித் பங்கேற்பு

2018-07-13@ 02:37:39

சென்னை : தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமிநாதையருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் தொகுப்பில் முதல் தொகுதி புத்தகத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று வெளியிட்டார். சென்னை பல்கலைகழக உ.வே.சுவாமிநாதையர் நூல் நிலையத்தின் 75ம் ஆண்டு நிறைவு விழா, உ.வே.சுவாமிநாதையர் கடித கருவூலம் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு புத்தகங்களை வெளியிட்டு பேசியதாவது: உ.வே.சுவாமிநாதையர் மிகச்சிறந்த முறையில் தமிழ்தொண்டு ஆற்றியுள்ளார். குறுந்தொகை, சீவகசிந்தாமணி ஆகியவை அவர் பதிப்பித்த நூல்களில் குறிப்பிடத்தக்கவை. உ.வே.சாவின் மகன் தன்னுடைய தந்தையின் ஓலைச்சுவடிகளில் தொகுப்பை கலாஷேத்ராவின் தலைவராக இருந்த ருக்மணி தேவியிடம் வழங்கியுள்ளார்.

அவரின் உதவியுடன் 1943ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் உ.வே.சா நூல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஓலைச்சுவடிகள், உள்பட பல்வேறு வகையான 33 ஆயிரம் நூல்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. உ.வே.சா கடித தொகுப்பு வெளியீடு போன்ற நிகழ்வுகள், பல தமிழறிஞர்கள் உருவாக உந்துதலாக இருக்கும். இதுவரை கிடைக்காத அரிய சங்க இலக்கிய நூல்கள் கிடைக்க உதவும். இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார். இந்த நிகழ்ச்சியில் உ.வே.ச.நூல் நிலைய தலைவர், விஐடி பல்கலைகழக வேந்தர் விஸ்வநாதன், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி, புத்த பதிப்பாசிரியர் வேங்கடபதி, உ.வே.சாவின் கொள்ளுப் பேரன் வெங்கடகிருஷ்ணன், பாஜ எம்பி இல. கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்