SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கட்டிட விதிமீறல்களைத் தடுக்காத சிஎம்டிஏவை ஏன் கலைக்க கூடாது : அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

2018-07-13@ 02:35:26

சென்னை : சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தை ஏன் கலைக்க கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் விதிமீறல் கட்டிடம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிமீறலை கண்டு கொள்ளாமல், அவர்களிடமிருந்து பணம் பெற்று கொண்டு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதா?, ஆக்கிரமிப்புகளை தடுக்காத சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தை ஏன் கலைக்க கூடாது? என்று நீதிபதி கேள்வி எழுப்பினர்.

கடந்த 2015 வெள்ளத்திற்கு பிறகும் மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ பாடம் கற்கவில்லையா.சென்னை மாநகராட்சியை பெருநகர மாநகராட்சி மாற்றியுள்ள நிலையில்  ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ வில் போதுமான பணியாளர்கள் உள்ளனரா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், சிஎம்டிஏ மற்றும் மாநகராட்சியில் உள்ள காலி பணியிடங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஜூலை 16-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்