SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்டக்டர் இல்லாமல் பேருந்துகள் இயக்கமா? அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

2018-07-13@ 02:34:30

சென்னை : கண்டக்டர்கள் இல்லாமல் தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படுகிறதா என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் இதுகுறித்து பதில் தருமாறு  போக்குவரத்து துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. சிஐடியுடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் ெசய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி பயணிகள் பேருந்துகளில் நடத்துனர் கண்டிப்பாக பணியில் இருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பல பேருந்துகள்  நடத்துனர் இல்லாமல் இயக்கப்படுகிறது.

இதுபோன்ற நடத்துனர் இல்லாமல் ேபருந்துகள் இயக்கப்படுவது சட்டவிரோதமாகும். எனவே, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “ சென்னை மாநகர பேருந்துகள், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் ஆகியவை நடத்துனர் இல்லாமல் இயக்கப்படுகிறதா? “ என்று கேள்வி எழுப்பியதுடன், இதுகுறித்து போக்குவரத்துத் துறை செயலாளர் வரும் 18ம் தேதி பதில் தர வேண்டும் என்று உத்தவிட்டார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்