SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சம்பா சாகுபடிக்கு ஏதுவாக ஆக.15க்குள் மேட்டூர் அணையை திறக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

2018-07-13@ 02:32:34

சென்னை : சம்பா சாகுபடிக்கு ஏதுவாக ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என தமிழக அரசை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக விவசாயிகள் இந்த வருடம் சம்பா சாகுபடி செய்வதற்கு ஏதுவாக மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15க்குள் திறக்க வேண்டிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் காவிரியில் இருந்து அணைகளுக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டும் நிலை உள்ளது.

எனவே தமிழக அரசு ஆகஸ்ட் 15ல் டெல்டா சம்பா சாகுபடிக்காக பாசனத் தண்ணீரை திறந்துவிட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, ஆணையக் கூட்டமும், ஒழுங்காற்றுக்குழு கூட்டமும் முடிவடைந்த நிலையில் தமிழகத்துக்கான காவிரி நதி நீரை இனிமேல் உரிய காலத்தில், உரிய நேரத்தில், முறையாக, முழுமையாக திறந்துவிட ஆணையம் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை மத்திய பாஜ அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும். தமிழக அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் ஆகியவற்றை தொடர்ந்து இனி வரும் காலம் தோறும் உரிய பங்கீடு சரியாக கிடைக்க வேண்டும் என்பதில் முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்