SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

2018-07-13@ 02:31:47

சென்னை : தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 15ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து,இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்குவதற்காக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க  15.7.18ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடைசி தேதியை மத்திய அரசு தற்போது நீட்டித்துள்ளது. இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஜூலை 15ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது ஜூலை 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு மனுக்களை பெற்று, ஆய்வு செய்து உடனடியாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்