SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

1000 கோடியை செலுத்த 2 நிறுவனம் முன்வந்ததால் 34,000 கோடி சொத்தை காப்பாற்றியது சஹாரா

2018-07-13@ 01:25:54

புதுடெல்லி : ரூ.1000 கோடியை செலுத்த இரண்டு நிறுவனங்கள் முன்வந்ததால் ரூ.34 ஆயிரம் ேகாடி மதிப்பிலான சொத்தை சஹாரா நிறுவனம் காப்பாற்றியது. முதலீட்டாளர்களின் ரூ.24,000 கோடி நிதியை மோசடி செய்த விவகாரத்தில் சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 18 மாதங்களுக்குள் ரூ.36,000 கோடியை இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியம் (செபி) அமைப்பிடம் சுப்ரதா ராய் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில், தவணைத் தொகையான ரூ.5,000 கோடியை டெபாசிட் செய்யாததால் சஹாரா நிறுவனத்துக்குச் சொந்தமாக மகாராஷ்டிர மாநிலம் ஆம்பி வேலி பகுதியில் இருக்கும் ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புகளை ஏலத்தில் விட உத்தரவிட்டனர்.

இதையடுத்து ரூ.4 ஆயிரம் கோடியை சஹாரா நிறுவனம் டெபாசிட் செய்தது. மீதம் உள்ள தொகைக்கு இரண்டு நிறுவனங்கள் ரூ.1000 கோடி மதிப்பில்மும்பை வாசாய் நகரத்தில் உள்ள சஹாரா நிறுவன சொத்துக்களை வாங்க முன்வந்தனர். இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது சஹாரா குழுமம் சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் முன்தொகையாக இரண்டு நிறுவனங்களும் வழங்கிய ரூ.99 கோடி மதிப்பிலான டிடி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. செப்டம்பர் 12க்குள் மீதி தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனால் ஆம்பி வேலி பகுதி ஏலத்தில் இருந்து தப்பியது.

ஆம்பிவேலியை வாங்க ஆள்இல்லை

ஆம்பி வேலி குடியிருப்பை விற்க உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மும்பை உயர்நீதிமன்றத்தால் அதிகாரப்பூர்வ ஏல அலுவலர் நியமிக்கப்பட்டார். அவர் ஏல அறிவிப்பை வெளியிட்டார். இதுதொடர்பான அறிக்கையை அவர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், ‘‘ஆம்பி வேலி குடியிருப்புகளை வாங்க தகுதியான யாரும் வரவில்லை. இதனால் ஏல அறிவிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் மீண்டும் ஏல அறிவிப்பு வௌியிட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மறு ஏல அறிவிப்பை நிறுத்த உத்தரவிட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்