SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜாதவ் தூக்கு தண்டனை வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் பாக். 2வது பதில் மனு

2018-07-13@ 01:25:08

இஸ்லாமாபாத்: குல்புஷன் ஜாதவ் தூக்கு தண்டனை வழக்கில் வரும் 17ம் தேதி சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் 2வது பதில் மனுவை தாக்கல் செய்கிறது. இந்தியாவை சேர்ந்த குல்புஷன் ஜாதவை பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 2016ம் ஆண்டு, மார்ச் 3ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. இந்திய கடற்படையை சேர்ந்த இவர், தனது நாட்டில் உளவு பார்க்கவும், தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்யவும் ஊடுருவியதாக அது குற்றம்சாட்டியது. இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், ஜாதவுக்கு தூக்கு தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்தாண்டு மே மாதம் வழக்கு தொடர்ந்தது. 10 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரித்து, இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் ஜாதவின் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என கடந்தாண்டு, மே 18ம் தேதி பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் தனது 2வது பதில் மனுவை தாக்கல் செய்வது பற்றி இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் நசிருல் முல்க் நேற்று ஆலோசனை நடத்தினார்.  இதில், 2வது பதில் மனுவை வரும் 17ம் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதேபோல், இந்தியாவும் தனது தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்