SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கெர்பருடன் நாளை மோதுகிறார் விம்பிள்டன் இறுதிச்சுற்றில் செரீனா

2018-07-13@ 01:22:32

லண்டன்: ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பின், கிராண்ட் ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார். விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்று நேற்று நடந்தது. இதில், முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 13ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஜூலியா கோயர்ஜசை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில் செரீனா 6-2, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். பிரசவத்திற்காக ஓராண்டு ஓய்வுஎடுத்த செரீனா அதன் பின் 10 மாத இடைவெளியிலேயே மீண்டும் பைனலுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். விம்பிள்டனில் இதுவரை 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள செரீனா, 10வது முறையாக பைனலில் விளையாட உள்ளார். மேலும், 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை எதிர்நோக்கி களமிறங்க உள்ளார்.

மற்றொரு அரை இறுதியில் ஜெர்மனியின் கெர்பர் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் லாட்வியாவின் ஒஸ்டபென்கோவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். நாளை நடக்க உள்ள பைனலில் செரீனா-கெர்பர் மோதுகின்றனர். நடால் - ஜோகோவிச் மோதல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதிப் போட்டியில் நம்பர்-1 வீரரான ரபெல் நடால், அர்ஜென்டினாவின் ஜூவான் மார்டின் டெல் போர்டோவை எதிர்த்து விளையாடினார். இதில் நடாலுக்கு போர்டோ கடும் நெருக்கடி தர 4 மணி 48 நிமிடம் வரை போட்டி தொடர்ந்தது. இறுதியில் நடால் 7-5, 6-7, 4-6, 6-4, 6-4 என்ற செட்களில் போராடி வெற்றி பெற்றார். இதன் மூலம், விம்பிள்டனில் 6வது முறையாக நடால் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். அரை இறுதியில் அவர், பழைய எதிரி செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை சந்திக்கிறார். இருவரும் மோதிய போட்டியில் 26 முறை ஜோகோவிச்சும், 25 முறை நடாலும் வென்றுள்ளனர். இன்று நடக்கும் மற்றொரு அரை இறுதியில் தென் ஆப்ரிக்காவின் ஆண்டர்சனும், அமெரிக்காவின் ஜான் இஸ்னரும் மோதுகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்