SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல் இன்னிங்சில் இலங்கை 287 ரன்

2018-07-13@ 01:21:47

காலே: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் கருணாரத்னே சதம் அடிக்க இலங்கை முதல் இன்னிங்சில் 287 ரன் சேர்த்தது.காலேவில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்தது. ரபாடா வேகத்தில் இலங்கை பேட்ஸ்மேன்கள் திணறினர்.

மறுமுனையில் சீனாமேன் சுழற்பந்து வீச்சாளர் ஷாம்சியும் நெருக்கடி தந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், துவக்க வீரர் கருணாரத்னே பொறுப்புடன் ஆடி சதம் அடித்தார். அவர் கைகொடுக்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 287 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோருடன் ஆல் அவுட்டானது. கருணாரத்னே 158 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரபாடா 4, ஷாம்சி 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா ஆட்ட நேர முடிவில், 4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 4 ரன்களுடன் உள்ளது. இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்க உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்