SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

6 விக்கெட் வீழ்த்தி குல்தீப் அசத்தல் இந்திய அணிக்கு 269 ரன் இலக்கு

2018-07-13@ 01:21:08

நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்திய அணிக்கு  269 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா, இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. நாட்டிங்காமில் நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பீல்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் துவக்க ஜோடி ஜேசன் ராய், பயர்ஸ்டோ அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்தனர்.

அவர்களின் ஆட்டம் குல்தீப் வரும் வரைதான்.  10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்களுடன் இருந்த இங்கிலாந்து அணி, குல்தீப் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது. ஜேசன் ராய் (38), பயர்ஸ்டோ (38), ரூட் (3) விக்கெட்டை வீழ்த்திய குல்தீப், சற்று தாக்கு பிடித்து அரைசதம் அடித்த பென் ஸ்டோக்ஸ் (50), பட்லர் (53) விக்கெட்டையும் வீழ்த்தினர். தனது கடைசி பந்தில் வில்லியை (1) வெளியேற்றிய குல்தீப், 10 ஓவரில் 25 ரன் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். சீனாமேன் சுழற்பந்துவீச்சாளர்களில் 6 விக்கெட் வீழ்த்தும் முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஒருநாள் போட்டியில் குல்தீப்பின் சிறந்த பந்துவீச்சும் இதுவே. மோர்கன் (19) விக்கெட்டை சாஹலும், மொயீன் அலி (24), ரஷித் (22) விக்கெட்டை உமேஷ் யாதவ்வும் கைப்பற்றினர். இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 268 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்ததாக 269 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்