SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஏடிஎம் கார்டு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி சந்துருஜி காலாப்பட்டு சிறையில் அடைப்பு: 5 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி மனு

2018-07-13@ 01:13:52

புதுச்சேரி: போலி ஏடிஎம் கார்டு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி சந்துருஜி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 5 நாள் காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி தென்மாநிலங்களில் நடந்த போலி ஏடிஎம் கார்டு மோசடி தொடர்பாக புதுச்சேரி சிபிசிஐடி போலீசார், 15 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி சந்துருஜியை 82 நாட்களுக்கு பிறகு சென்னை வியாசர்பாடியில் வைத்து சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.  புதுச்சேரி கொண்டுவரப்பட்ட சந்துருஜியிடம் சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவரை நேற்று மதியம் புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவரை வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி கிருஷ்ணசாமி உத்தரவிட்டார். அதன்பேரில் சந்துருஜி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கைதான சந்துருஜியிடம் முழுமையான விசாரணை நடத்த முடியாததால் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் நேற்று மனு செய்தனர். இந்த மனு, இன்று விசாரணைக்கு வரவுள்ளது.  ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு மோசடியில் ெமாத்தம் 140 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வரிடம் டிஜிபி விளக்கம்
டிஜிபி சுந்தரி நந்தா ஏடிஎம் கார்டு மோசடி வழக்கு தொடர்பாக முதல்வர் நாராயணசாமியை நேற்று நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது சந்துருஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் கூறியதாக தெரிகிறது. அப்போது இவ்வழக்கில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க டிஜிபியை முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

  • thirupathiseventh

    திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • 20-09-2018

    20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்