SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

2018-07-13@ 01:13:03

கோபி: வரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு படிக்கும்  மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மற்றும் சைக்கிள் வழங்கப்படும் என செங்கோட்டையன்  தெரிவித்தார்.    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டடிபாளையம் தனியார்  கல்லூரியில் சி.ஏ. படிப்புக்கான பயிற்சியை பள்ளி கல்வித்துறை  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், முன்னிலை வகித்தார். பின்னர்   செங்கோட்டையன் அளித்த பேட்டி:

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 தேர்வு முடிவு  வெளியான 15 நாளில், தனியார் கல்லூரிகளில் உணவு, இருப்பிட  வசதியுடன் ஆண்டுதோறும் 25,000 மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி (சி.ஏ) அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணி இன்று தொடங்கி  உள்ளது. விரைவில் அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவி  பொருத்தப்படும். வரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு படிக்கும்  மாணவர்களுக்கு அரசின் இலவச லேப்டாப் மற்றும் சைக்கிள் வழங்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்