SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி திருமணத்துக்கு வற்புறுத்திய சென்னை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற கல்லூரி மாணவி: திடுக்கிடும் வாக்குமூலம்

2018-07-13@ 01:09:16

திருச்சி, ஜூலை 13: ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி திருமணத்துக்கு வலியுறுத்தியதால் பிசியோதெரபிஸ்ட்டை கூலிப்படையை ஏவி கல்லூரி மாணவி கொன்றார்.   அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பியை சேர்ந்தவர் விஜயகுமார் (37). சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கர்ப்பகாம்பிகை. ஈரோட்டில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகளும், ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 8ம் தேதி விஜயகுமார் சென்னையில் இருந்து பொன்பரப்புக்கு வந்து உறவினர்களை சந்தித்தார். பின்னர் மனைவியை பார்க்க ஈரோடு புறப்பட்டார்.

மனைவியிடம் திருச்சி டோல்கேட் வந்திருப்பதாகவும், ஈரோடு பஸ் ஏறியதும் போன் செய்வதாகவும் கூறியவர் அதன்பிறகு ஈரோட்டுக்கும் செல்லவில்லை. சென்னைக்கும் திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் விஜயகுமாரின் தந்தை ஆறுமுகம் புகாரின்படி செந்துறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருச்சி திருவானைக்காவலில் இருந்து கல்லணை செல்லும் வழியில் திருவளர்ச்சோலை அருகே காவிரி ஆற்றங்கரையோரம் ஒரு வாலிபர் சடலம் கிடப்பதாக நேற்றுமுன்தினம் ரங்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. , வாலிபர் குறித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். சடலத்தின் புகைப்படமும் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து விஜயகுமார் மாயமான தகவல் குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு செந்துறை போலீசார் தகவல் அளித்தனர். விஜயகுமாரின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து ஸ்ரீரங்கம் வரவழைத்தனர். சடலத்தை தந்தை பார்த்து, தனது மகன் விஜயகுமார்தான் என்பதை உறுதி செய்தார். இதன்பின், விஜயகுமாரின் செல்போனை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் அதிகம் முறை பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, அந்த எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தனர். விசாரணையில், அந்த பெண் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த ஈஸ்வரி (21) எனவும், கூலிப்படையை ஏவி விஜயகுமாரை கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் அழைப்பை ஏற்று ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஈஸ்வரி சரணடைந்தார்.

போலீசாரிடம் ஈஸ்வரி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: குளித்தலை எனது சொந்த ஊர். தந்தை சொந்தமாக லாரி ஓட்டுகிறார். அம்மா கிடையாது. ஒரு தங்கை இருக்கிறாள். நான் (ஈஸ்வரி) சென்னையில் சி.ஏ. படித்து வருகிறேன். சி.ஏ. முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். நுங்கம்பாக்கத்தில் தங்கியிருந்து சென்னை பாரிமுனையில் ஒரு ஆடிட்டர் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். கடந்த 6 மாதம் முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தேன். பின்னர், விடுமுறை முடிந்து திருச்சி சென்று அங்கிருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டேன்.

நான் பயணித்தது முன்பதிவு இல்லாத பெட்டி. கூட்டம் அதிகமாக இருந்ததால் தரையில் அமர்ந்திருந்தேன். அதே ரயிலில் பிசியோதரபிஸ்ட் விஜயகுமார் ஏறினார். அப்போது அவர் என் அருகில் அமர்ந்து கொண்டார். சென்னை செல்லும் வரை இருவரும் பேசிக்கொண்டே சென்றோம். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றதும், என் செல்போன் எண்ணை பெற்று அவர் செல்போன் நம்பரை வழங்கினார். போனில் அடிக்கடி பேசி நட்பு வளர்ந்தது. சென்ைன அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் தங்கியிருந்த விஜயகுமார், நுங்கம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட்டாக இருந்தார். ஒரு நாள் அவர் அறைக்கு அழைத்து ெசன்று என்னுடன் உல்லாசமாக இருந்தார். இதேபோல், பலமுறை நாங்கள் உறவு கொண்டுள்ளோம். ஆனால், எனக்கு தெரியாமல் விஜயகுமார் அதை வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

 ஒரு நாள் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். அப்ேபாதுதான் அவர் திருமணம் ஆனவர் என்பதும், 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இதனால் பிரச்னை ஏற்பட்டது. அதற்கு அவர், உனக்காக மனைவியை விவாகரத்து செய்து விடுவதாக கூறினார். அதற்கு நான் படிக்க வேண்டும் என மறுப்பு தெரிவித்தேன். ஆனாலும் விஜயகுமார் விடாமல் என்னை தொந்தரவு செய்தார். இதனால் நான் நுங்கம்பாக்கத்தில் இருந்து கோடம்பாக்கத்திற்கு சென்று தனியார் விடுதியில் இருந்தேன். அதனை கண்டுபிடித்த விஜயகுமார், நேரில் வந்து `என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நாம் உல்லாசமாக இருந்ததை  வீடியோ எடுத்து வைத்துள்ளேன். அதனை பேஸ்புக்கில் அப்லோடு பண்ணுவேன்’ என்று மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நான், விஜயகுமாரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். அதற்காக மாஸ்டர் பிளானை மனதுக்குள் வகுத்தேன். இதனிடையே, கடந்த 7ம் தேதி திருச்சிக்கு வந்து சத்திரம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினேன். பின்னர், `யாரிடம் எனது மனக்குறையை கூறி கொலை செய்ய தூண்டுவது’ என யோசித்தப்படி சத்திரம் பஸ் நிலையத்தில் வெகுநேரம் அமர்ந்திருந்தேன். அப்போது, மாநகராட்சி துப்புரவு தொழிலாளி மாரிமுத்து என்பவர் போதையில் எல்லோரையும் மிரட்டிக்கொண்டு இருந்தார். அவரை சந்தித்து, எனக்கு நடந்த கொடுமையை கூறி,  அவனை கொலை செய்ய வேண்டும் என்று கதறி அழுதேன். என் கதையை கேட்டதும் விஜயகுமாரை கொல்ல சம்மதித்தார். கொலைக்கு கூலியாக அதிக பணம் கேட்டார்.

ஆனால் நான் ரூ.55 ஆயிரம் தருவதாக பேசி முன்பணமாக ரூ.5 ஆயிரம் கொடுத்து, அவரின் செல்போன் எண்ணை பெற்று கொண்டேன்.
அதைத்தொடர்ந்து அன்று இரவே விஜயகுமாருக்கு போன் செய்து திருமணம் குறித்து பேச வேண்டும் எனகூறி திருச்சி வரும்படி கூறினேன். இதன்பின், மறுநாள் கொலை செய்ய வேண்டிய இடத்தை நேரில் பார்க்க சத்திரம் பகுதியில் இருந்து நாங்கள் இருவரும் புறப்பட்டோம். அப்போது மாரிமுத்துவுடன் அவரது நண்பர்கள் 2 பேரும் வந்தனர். கல்லணை செல்லும் வழியில் திருவளர்ச்சோலை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத காவிரி கரையை தேர்வு செய்தோம்.

அந்த இடத்துக்கு விஜயகுமாரை வரவழைத்து கொலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம். இதற்கிடையில் நான் சொன்னதை நம்பி  விஜயகுமார் சென்னையில் இருந்து பொன்பரப்புக்கு வந்தார்.  மனைவியை பார்க்க ஈரோடு செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டு திருச்சி சத்திரம் பஸ் நிலையத்துக்கு மாலை 5 மணிக்கு வந்தார். அங்கு தயாராக இருந்த நான், விஜயகுமாரை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் காவிரி கரைக்கு சென்றேன். அங்கு ஏற்கனவே பேசி வைத்த இடத்திற்கு அழைத்து சென்று இருவரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தோம். அப்போது புதர் மறைவில் இருந்த மாரிமுத்து உள்பட 3 பேரும் அங்கு கத்தியுடன் வந்தனர். நான் நடந்து சென்றுவிட, 3 பேரும் விஜயகுமாரை ஒரே கத்தியால் மாறி மாறி குத்தி கொலை செய்தனர்.

இவ்வாறு ஈஸ்வரி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த தாராநல்லூரை சேர்ந்த மாரிமுத்து மற்றும் அவரது நண்பர்கள் மாநகராட்சி ஊழியர் கணேஷ், மேளம் அடிக்கும் தொழிலாளி கும்பா (எ) குமார் ஆகிய 3 பேரையும் பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

10ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 2ம் இடம்
ைகதான மாணவி ஈஸ்வரி திருச்சி உறையூரில் உள்ள ஆங்கில வழி பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். கடந்த 2013ல் நடந்த பொது தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்த அவர், மாநிலத்தில் இரண்டாவது மாணவியாகத் தேர்வு பெற்றார். அதன்பின், பிளஸ் 2 தேர்வில் 1183 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் 2ம் இடம் பிடித்தார்.

உடலை பார்க்க
விருப்பமில்லை: மனைவி ஆவேசம்
விசாரணையில் விஜயகுமாரின் லீலைகள் குறித்து மனைவிக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, ஆவேசமடைந்த அவர், எனக்கு அவர் கணவரே கிடையாது. ஒரு இளம்பெண்ணின் வாழ்வை சீரழித்துள்ளார், அவரின் உடலை பார்க்க கூட எனக்கு விருப்பம் இல்லை. அவரது உடலை வாங்க மாட்டேன்  என போலீசாரிடம் கூறியுள்ளார்.

அப்பாவிடம் பணம் கேட்ட ஈஸ்வரி
கொலைக்கு கூலிக்காக, 9ம் தேதி தந்தையை தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் தேவைப்படுவதாக கூறி வங்கி கணக்கில் போடவைத்துள்ளார். அந்த பணத்தை எடுத்து கொண்டு நேற்று முன்தினம் திருச்சி வந்து மாரிமுத்துவிடம் மீதி கூலிப்பணம் ரூ.50 ஆயிரத்தை  கொடுத்து சென்றுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahipoornima

  கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

 • AeroShowBangalore19

  பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

 • ChennaiMarinaMaasiMagam

  மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

 • AlbinoTurtleheart

  உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

 • ModiSalmanDelhi

  சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்