SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அறநிலையத்துறை கோயில்களில் பல ஆண்டுகளாக பணியாற்றிய 84 செயல் அலுவலர்கள் ஒரே நாளில் அதிரடி மாற்றம்: கமிஷனரின் உத்தரவால் பரபரப்பு

2018-07-13@ 01:06:59

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரிந்து வந்த 84 செயல் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து இருப்பது அறநிலையத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரியும் செயல் அலுவலர், உதவி ஆணையர், இணை ஆணையர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், விருப்பத்தின் பேரிலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், அதிகாரிகள் பலர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்தனர். இவ்வாறு ஒரே இடத்தில் பணிபுரிவதால் முறைகேடுக்கு வழிவகுக்கும் என்று குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அவர்கள் மாற்றம் செய்யப்படாமல், தொடர்ந்து ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில், பல்வேறு ேகாயில்களில் பணிபுரியும் கோயில் செயல் அலுவலர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.
இதையடுத்து 84 செயல் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கமிஷனர் ஜெயா உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவள்ளூர் திரிபுராந்தக சுவாமி கோயில் செயல் அலுவலர் கவிதா, காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் செயல் அலுவலராகவும், மயிலாடுதுறை வீரட்டேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு, மதுராந்தகம் திருமலைவையாவூர் பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோயில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ரமேஷ், கம்பம் கம்பராய பெருமாள் மற்றும் காசி விஸ்வநாத சுவாமி கோயில், கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தூத்துக்குடி சங்கரராமஸேவரர் கோயில், சுவாமிமலை சுவாமி நாதசுவாமி கோயில் செயல் அலுவலர் அமரநாதன், பேராவூரணி வீரமாகாளியம்மன் கோயில்,

திருப்போரூர் கந்தசாமி கோயில் அலுவலர் நற்சோனை ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் கோயில், சென்னை சென்னமல்லீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் சக்திவேல் திருப்போரூர் கந்தசாமி கோயில் அலுவலர், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கவிதா திருவாரூர் தியாகராஜசுவமி கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் செந்தூர்பாண்டியன் புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் சின்னமனூர் பூலாந்தீஸ்வரர் கோயில், சீர்காழி கல்யாண ரெங்கநாத சுவாமி கோயில் செயல் அலுவலர் கோபி பொன்னேரி திருவாயற்படி கிருஷ்ண பெருமாள் கோயிலுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இணை ஆணையர், உதவி ஆணையர் மாற்றம் எப்போது?
அறநிலையத்துறையில் இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் பலர் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணியிட மாற்றம் செய்யாமல் அறநிலையத்துறை தாமதப்படுத்தி வருகிறது. இதில், பலர் மீது புகார்கள் உள்ள நிலையிலும், அவர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

  • thirupathiseventh

    திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • 20-09-2018

    20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்