SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்ட அமலாக்கப் பிரிவு நிறுவனங்கள் அரசியல் தலையீடுகள் இல்லாமல் செயல்படுவதை உறுதி செய்யவேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

2018-07-13@ 01:05:12

சென்னை: சட்ட அமலாக்கப் பிரிவு நிறுவனங்கள் அரசியல் தலையீடுகள் இல்லாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:  2018 - தொழில் தொடங்குவதற்கு எளிமையான நடைமுறைகள் உள்ள மாநிலங்கள் பட்டியலில் அ.தி.மு.க அரசின் மோசமான செயல்பாடுகளால் தமிழகம் பின் தங்கியிருக்கிறது.

 இதன்மூலம், எத்தனை தொழில் நிறுவனங்கள் அ.தி.மு.க ஆட்சியில் மோசமான சூழலை சந்தித்திருக்கிறது என்பது தெளிவாகிறது. அதிமுக அரசின் முதலீட்டாளர்கள் சந்திப்பில் ஏற்பட்ட தோல்விக்கு இதுவே சான்று. மத்திய அரசின் ஏஜென்டுகளையும் குறிப்பாக வருமான வரித்துறையை கொண்டும், அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களையும், எதிர்க்கட்சிகளையும் திட்டமிட்டு தவறாக பயன்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது. இது உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக அமைகிறது. சட்ட அமலாக்கப் பிரிவு நிறுவனங்கள் அரசியல் தலையீடுகள் இல்லாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்