SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட பலரிடம் விசாரிக்க வேண்டும்: டிடிவி.தினகரன் பேட்டி

2018-07-13@ 01:04:32

சென்னை: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலரை நீதிபதி விசாரணைக்காக அழைக்க வேண்டும் என அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் நடப்பது ஒரு அரசு போல் தெரியவில்லை. மகளுக்கு வேலை, சம்பந்திக்கு சலுகை, குடும்பத்தினருக்கு சலுகைகள் என நடந்து கொண்டு இருக்கிறது. இது அரசாங்கமா அல்லது தனிப்பட்ட ஒரு கம்பெனியா என தெரியவில்லை.

18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும், இந்த ஆட்சி தானாக முடிவுக்கு வந்துவிடும். அதன்பின்னர், தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்கப்படும். அப்போது, இதுவரை மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளியே கொண்டு வரப்படும். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலரை நீதிபதி விசாரணைக்காக அழைக்க வேண்டும். அப்படி அழைக்காவிட்டால், நாங்கள் சட்டப்படி மனு செய்வோம்.
பிப்ரவரி மாதம் 25ம் தேதி தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார்.

மறுநாள் 26ம் தேதியே, அதற்கு அனுமதி அளிக்கப்பட்டு, 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது தமிழக மக்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஆட்சி அமைந்த பிறகு, இந்த சாலை அமைக்கும் பணி, எந்த நிலையில் இருந்தாலும், உடனடியாக நிறுத்தப்படும்.  தமிழகத்தை பொறுத்தமட்டில், வரும் நாடாளுமன்ற தேர்தலில், எங்களது கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

  • china_harrvestingfestiv12

    சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா - கோலாகலமாக கொண்டாடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்