SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீடு கட்டுபவரை மிரட்டி 2 லட்சம் கேட்டு மிரட்டல் போலி சிஎம்டிஏ அதிகாரிகள் கைது

2018-07-13@ 01:03:18

சென்னை: புதிதாக வீடு கட்டும் நபரிடம் முறையாக சிஎம்டிஏ அங்கீகாரம் இல்லாமல் வீடுகட்டுவதாக கூறி 2 லட்சம் கேட்டு மிரட்டிய போலி சிஎம்டிஏ அதிகாரிகள் இரண்டு பேரை போலீசார் கைது ெசய்தனர். சென்னை விருகம்பாக்கம் யாதவ் தெருவை சேர்ந்தவர் பசுபதி (48). இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். ேநற்று மதியம் இரண்டு பேர் பசுபதி வீடு கட்டும் இடத்திற்கு வந்தனர். வீட்டின் உரிமையாளர் பசுபதியை அழைத்து, ‘‘நீங்கள் சிஎம்டிஏ அனுமதி இல்லாமல் வீடுகட்டுவதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளது. எனவே, நீங்கள் வீடுகட்டுவதற்கான சிஎம்டிஏ அனுமதியை காட்டுங்கள்’’ என்று கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பசுபதி, ‘‘நான் முறையாக அனுமதி பெற்று தான் வீடு கட்டுகிறேன். உங்களை பார்த்தால் சிஎம்டிஏ அதிகாரிகள் போல் இல்லையே’’ என்று கூறி உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள் என்று பசுபதி கூறியுள்ளார். அதற்கு, ‘‘எங்களிடமே நீ அடையாள அட்டை கேட்கிறீயா’’ என்று கூறி சிஎம்ஏடி ெலட்டர் பேடில் முறையாக அனுமதி இல்லாமல் வீடு கட்டுவதாக கூறி அபராத தொகையாக 2 லட்சம் விதித்து அதற்கான ரசீதும் பசுபதியிடம் கொடுத்தனர்.

பின்னர், இருவரும், ‘‘அலுவலகம் வந்து அபராத தொகை கட்டினால் 2 லட்சம் கட்ட வேண்டும். எங்களை முறையாக கவனித்தால் நாங்கள் கண்டு கொள்ளாமல் செல்கிறோம்’’ என்று கூறியுள்ளனர். உடனே, பசுபதி உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள் என்று திரும்ப கேட்டுள்ளார். அப்போது, ஒருவர் அடையாள அட்டையை எடுக்கும்போது கல்வித்துறை அதிகாரி என்ற ெபயரில் உள்ள அடையாள அட்டை ஒன்று கீழே விழுந்தது. இதைபார்த்த பசுபதி, பொதுமக்கள் உதவியுடன் இருவரையும் பிடித்து, விருகம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், வியாசர்பாடியை சேர்ந்த தேவராஜ் (50), பெரம்பூரை சேர்ந்த கவுதம் (35) என தெரியவந்தது. இவர்கள் இருவரும் சிஎம்டிஏ உதவி கள அலுவலர் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் என்றும் போலியாக அடையாள அட்டைகள் தயாரித்து புதிய கட்டிடம் கட்டும் நபர்களிடம் மிரட்டி பல லட்சம் பணம் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட தேவராஜ், கவுதமனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி  சிஎம்டிஏ ஐடி கார்டு, கல்வித்துறை ஐடிகார்டு, சிஎம்டிஏ ெலட்டர் பேட் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trump1_putin_met

    ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டம்!

  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்