SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

2 கல்லூரி மாணவிகள் மாயம்

2018-07-13@ 00:59:50

சென்னை: கீழ்ப்பாக்கம் அருகே டி.பி.சத்திரம், ஷெனாய் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (48). இவரது மகள் காவ்யா (19). தி.நகரில் உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு செல்வதாக வீட்டை விட்டு கிளம்பினார். அதன்பிறகு காவ்யா வீடு திரும்பாமல் மாயமாகிவிட்டார்.  இதேபோல், அயனாவரம் அடுத்த நம்மாழ்வார்பேட்டை, சுப்பராயன் 4வது தெருவில் வசிப்பவர் நசிமா பீவி (43). இவரது மகள் ராபியா (22). இவர், எழும்பூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு செவிலியர் பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றவர், அதன்பிறகு திடீரென மாயமாகிவிட்டார்.

* கீழ்ப்பாக்கம், சாஸ்திரி நகர் முதல் தெருவில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் ராஜ்கமல் (32) என்பவரின் 2 குழந்தைகளை விளையாட விடாமல் மிரட்டிய, அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (33) மற்றும் அவரது உறவினர் ஜெயகாந்தன் (27) ஆகிய 2 பேரை ராஜ்கமலும் அவரது தந்தையும் சேர்ந்து கடந்த 8ம் தேதி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இந்த வழக்கில் ராஜ்கமலை கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த செல்வராஜை நேற்று காலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
* சென்னை ஐசிஎப், காந்தி நகரை சேர்ந்த பொக்லைன் டிரைவர் ராமச்சந்திரன் (23) என்பவரை நேற்று முன்தினம் இரவு சரமாரியாக அடித்து உதைத்து அவரிடம் இருந்த 2 சவரன் செயினை பறித்து கொண்டு ஓடிய கொள்ளையர்கள் 2 பேரில் ஒருவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். விசாரணையில், ஐசிஎப் காந்தி நகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (25) என்பது தெரிந்தது. இதையடுத்து, ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பாக்கெட் ராஜனை தேடி வருகின்றனர்.
* கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி மகள் சஞ்சிதா (19). அடையாறில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று சஞ்சிதா வீட்டிற்கு திரும்பினார்.
பின்னர், இரவு சஞ்சிதா செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அழைப்பில் படி பேசிய பிறகு சஞ்சிதா மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று காலை சஞ்சிதா தனது அறையில் தூக்கில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து, கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிந்து, செல்போன் அழைப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.
* மதுரவாயல் போரூர் கார்டன், 10வது தெருவை சேர்ந்த டேவிட்சன் மணி (65) என்பவர் வீட்டில் நேற்று முன்தினம் புகுந்த மர்ம ஆசாமிகள், வீட்டிற்குள் பொருட்கள் ஏதும் இல்லாததால், கார் சாவியை எடுத்து வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த காரை திருடிச் சென்று விட்டனர். இதேபோல், போரூர் கார்டன், 9வது தெருவில் உள்ள அல்போன்ஸ் பிரபு (50) என்பவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், பொருட்கள் ஏதுவும் இல்லாததால் திரும்பிச்சென்றனர்.
* மதுரவாயலை அடுத்த நூம்பல், பாலாஜி நகர், 1வது தெருவை சேர்ந்த பர்னிச்சர் கடை நடத்தி வரும் சித்திக் அலி (44), என்பவர் கடன் தொல்லையால் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* புழல் கதிர்வேடு, பாலாஜி நகர் 4வது தெருவை சேர்ந்த அன்பு (எ) அன்புக்குமார் (48) என்பவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 12 சவரன் நகைகளை திருடி சென்றனர்.
* தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடிகளான வியாசர்பாடி ஏ கல்யாணபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (எ) மோடி மணி (28), பி கல்யாணபுரத்தை சேர்ந்த மனோத்ராஜ் (எ) வால் மனோத் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-09-2018

  24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-09-2018

  23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-09-2018

  22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்