SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணா நகர் பகுதியில் தொடர் திருட்டு கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த புதுச்சேரி வாலிபர் கைது

2018-07-13@ 00:58:24

சென்னை: அண்ணா நகர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த முக்கிய குற்றவாளியை 25 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளுடன் போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டின் பூட்டை  உடைத்தும், நகை கடைகளில் பூட்டை உடைத்தும் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உருக்கி அதை விற்பனை செய்ய பேருந்து மூலம் குற்றவாளி ஒருவர் சென்னை வருவதாக தகவல் கிடைத்தது.

அதன்படி, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குற்றவாளியை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து வந்த பேருந்தில் இருந்து கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் இறங்கினார். போலீசாரை பார்த்ததும் அந்த நபர் ஓட முயன்றார். இதை பார்த்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். உடனே, போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் 25 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, புதுச்சேரி மாநிலம் ராமலிங்கம் நகரை சேர்ந்த மூர்த்தி (37) என்பது தெரியவந்தது. மேலும், சென்னை அண்ணாநகர் பகுதியில் தொடர் திருட்டில் கிடைக்கும் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் புதுச்சேரிக்கு எடுத்து ெசன்று மூர்த்தியின் வீட்டில்தான் தங்குவார்கள். பிறகு கொள்ளையடித்த நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றிவிடுவார்கள். பின்னர் மூர்த்தி உதவியுடன் அந்த தங்க மற்றும் வெள்ளி கட்டிகளை சென்னைக்கு எடுத்து வந்து விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து, மூர்த்தியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 25 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற கொள்ளையர்கள் குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்