SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனைவிக்கு பாலியல் தொந்தரவு பக்கத்து வீட்டுக்காரரின் தண்டனை உறுதி : சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

2018-07-13@ 00:57:46

சென்னை: வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சுப்பையா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பார்வையற்றவரான இவரது மனைவி வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கண்ணபிரான். இவர் சுப்பையாவின் மனைவியிடம் அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதுதொடர்பாக, விசாரணை நடத்திய வண்ணாரப்பேட்டை போலீசார் கண்ணபிரானைக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை  7வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் கண்ணபிரானுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கண்ணபிரான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனு நீதிபதி டீக்காராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, செஷன்ஸ் நீதிமன்றத்தின் தண்டணையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்