SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சத்துணவுக்கான முட்டை டெண்டர் ரத்து எதிரொலி: பள்ளி குழந்தைகளுக்கு ஆக.1 முதல் முட்டை கிடைக்குமா? பெண் அமைச்சர் பதில் சொல்ல மறுப்பு

2018-07-13@ 00:55:52

சென்னை: கிறிஸ்டி நிறுவனத்தில் நடந்த முறைகேடு காரணமாக சத்துணவு குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து பள்ளி குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுபற்றி பெண் அமைச்சர் சரோஜாவிடம் கேட்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டார். தமிழக அரசு சார்பில், சத்துணவு திட்டத்திற்கு முட்டை வழங்குவதற்கான டெண்டர் நேற்று முன்தினம் சென்னை, தரமணியில் உள்ள சமூகநலத்துறை அலுவலகத்தில் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்யும் டெண்டருக்கு 6 நிறுவனங்கள் டெண்டர் கோரி இருந்தன. அதில் 3 நிறுவனங்கள் கிறிஸ்டி நிறுவனம் ஆகும்.

கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்துள்ளதால், அந்நிறுவனத்துக்கு மீண்டும் டெண்டர் வழங்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் கோழி பண்ணையாளர்கள் வலியுறுத்தினர். இதனால் நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று முன்தினம் சத்துணவுக்கு முட்டை வழங்குவதற்கான டெண்டர் திறக்கப்பட்டது. ஆனாலும், டெண்டரில் பங்கேற்ற ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஏதாவது ஒரு காரணம் கூறி டெண்டர் நிராகரிக்கப்பட்டது.தற்போது கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால் மீண்டும் அந்நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கினால் பிரச்னை வரும் என்பதாலேயே முட்டை டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோழி பண்ணையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுக்கு முட்டை வழங்கும் டெண்டர் இந்த மாதத்துடன் (ஜூலை) முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த மாதம் ஆகஸ்ட் 1ம் தேதியில் புதிய டெண்டர் விடப்பட்டு முட்டை வழங்க வேண்டும். தற்போது முட்டை டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் டெண்டர் கோர வேண்டும். ஆனால் அதற்கு காலதாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதனால், வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவில் முட்டை வழங்கப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இதுகுறித்து சென்னை, தலைமை செயலகத்தில் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாவை அவரது அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேச முயன்றபோது, “இன்றைக்கு முழுவதும் மீட்டிங் இருப்பதால் யாரையும் பார்க்க நேரம் இல்லை” என்று மறுத்துவிட்டார். இதுபற்றி அவரது உதவியாளர்களிடம் கேட்டபோது, அமைச்சர் சரோஜா யாருடனும் மீட்டிங் நடத்தவில்லை. கடந்த சில நாட்களாக முட்டை ஊழல் குறித்த செய்திகள் வெளிவருவதால்தான் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்று கூறினர்.

குறைந்த விலைக்கு முட்டை வழங்க தயார்
தமிழக அரசு முட்டை டெண்டரை ரத்து செய்துள்ள நிலையில், நாமக்கல் பகுதியை சேர்ந்த கோழி பண்ணையாளர்கள் சிலர் கூறியதாவது:கடந்த திமுக ஆட்சியில் சத்துணவு குழந்தைகளுக்கு மாவட்ட வாரியாக முட்டை கொள்முதல் செய்யப்பட்டது. பின்னர் அதிமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் முழுவதும் ஒரே நிறுவனம் முட்டை சப்ளை செய்து வருகிறது. அதுவும் கடையில் விற்பனை செய்வதற்கும் அதிகமான விலையில் ஒரு முட்டை 4.43 என்ற நிலையில் கொள்முதல் செய்கிறது. உண்மையில் ஊழல் இல்லாமல் சத்துணவு திட்டத்துக்கு ஒரு முட்டை 3.50க்கு கூட சப்ளை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். சத்துணவு குழந்தைகளுக்கு தினசரி 55 லட்சம் முட்டை தேவைப்படுகிறது.

இதில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், கட்சிக்காரர்கள் தலையீடு அதிகளவு உள்ளதால் ஒரு முட்டைக்கு 50 பைசாவுக்கு மேல் ஊழல் பணம் கைமாறுகிறது. இதை தடுத்து நியாயமான முறையிலும், மாவட்ட வாரியாக சத்துணவு திட்டத்துக்கு முட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-07-2018

  21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • DryingClothingfestival

  சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

 • unmanedbookshopchina

  சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

 • newyork_steam_explosion

  நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

 • Apollo11NeilArmstrong

  நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்