SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகனை கொலை செய்த கள்ளக்காதலனை தீர்த்துக் கட்ட கள்ளத்துப்பாக்கி வாங்க முயன்ற மின்வாரிய பெண் அதிகாரி கைது

2018-07-13@ 00:55:04

* 2 லட்சத்துக்கு பொம்மை துப்பாக்கி வாங்கி கொடுத்த ஆண் நண்பர்களும் சிக்கினர்

சென்னை: மகனை கொடூரமாக கொலை செய்த கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட 2 லட்சத்துக்கு கள்ளத்துப்பாக்கி வாங்க முயன்ற மின்வாரிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார். பணத்தை பெற்றுக்கொண்டு பொம்மை துப்பாக்கி வாங்கி கொடுத்து ஏமாற்றிய 2 ஆண் நண்பர்களையும் போலீசார் பிடித்துள்ளனர். சென்னை நெசப்பாக்கம் பாரதிநகர் ஏழுமலை தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (38). இவர், கடந்த பிப்ரவரி 28ம் தேதி எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் 10 வயது மகன் ரித்தேஷ் சாய் மாயமானதாக புகார் அளித்தார். விசாரணையில், மின்வாரியத்தில் இளநிலை பொறியாளரான கார்த்திகேயனின் மனைவி மஞ்சுளாவின் கள்ளக்காதலன் நாகராஜ், கடைசியாக ரித்தேஷ் சாயை இந்தி டியூசனில் இருந்து அழைத்து சென்றது தெரிந்தது.

போலீசார், நாகராஜை பிடித்து விசாரித்ததில், தனது கள்ளக்காதலியை பழிவாங்க அவரது மகன் ரித்தேஷ் சாயை சேலையூர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நாகராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து, மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வந்த மஞ்சுளாவை அதிகாரிகள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தனர். அதேநேரம், மஞ்சுளா கணவர், தனது மனைவியின் கள்ளக்காதலால் மகனை இழந்துவிட்டேன் என்ற வேதனையில் தனியாக வசித்து வருகிறார். தற்போது மஞ்சுளா சைதாப்பேட்டை ஸ்ரீராம் நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தனது ஒரே மகன் ரித்தேஷ் சாயை கொலை செய்த கள்ளக்காதலன் நாகராஜை பழிவாங்க மஞ்சுளா முடிவு செய்தார். நாகராஜ் சிறையில் இருந்து வெளியே வந்த உடன், அவரை ரகசியமாக அழைத்து சென்று துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக, மஞ்சுளா பள்ளிக்கரணை ராஜீவ் காந்தி 2வது தெருவை சேர்ந்த சுதாகர் (எ) சுரேஷ் (31), நந்தனம் கிழக்கு சிஐடி நகர், 3வது குறுக்கு தெருவை சேர்ந்த பிரசாந்த் (24) ஆகியோரிடம் கள்ளத்துப்பாக்கி வாங்கி தர சொல்லி தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து துப்பாக்கி வாங்கி தருவதாகவும் கள்ளக்காதலன் நாகராஜை கொலை செய்ய உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்காக, மஞ்சுளாவிடம் 2 லட்சம் பணத்தை இருவரும் பெற்றுள்ளனர்.

இதன்படி கள்ளத்துப்பாக்கியை வாங்கி மஞ்சுளாவிடம் கொடுத்து ள்ளனர்.வீட்டுக்கு சென்று துப்பாக்கியை பார்த்த போது, பொம்மை துப்பாக்கியாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மஞ்சுளா பிரசாந்த் மற்றும் சுரேஷை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘‘நான் ேகட்ட நிஜ துப்பாக்கி எங்கே, பொம்மை துப்பாக்கி இருக்கு’’ என்று கூறி கடுமையாக திட்டி உள்ளார்.அதற்கு, அவர்கள் உனக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்து விட்டு நாங்களும் சிறைக்கு செல்லவா என்று கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, இருவரும் ‘‘துப்பாக்கி விவகாரம் குறித்து போலீசில் சொல்லிவிடுவோம். ஒழுங்காக இரு’’ என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளனர்.

தன்னிடம் 2 லட்சம் பணத்தை ெபற்று பொம்மை துப்பாக்கி வாங்கி கொடுத்த இரண்டு பேரையும் பழிவாங்க மஞ்சுளா முடிவு செய்தார். அதற்காக, மஞ்சுளா சைதாப்ேபட்டை காவல் நிலையத்தில் பிரசாந்த் மற்றும் சுரேஷ் ஆகியோர் மீது 2 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார். அதன்படி, போலீசார் பிரசாந்த் மற்றும் சுரேஷை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தான், நடந்த சம்பவம் குறித்து இருவரும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

 இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் கள்ளக்காதலனை கொலை செய்ய துப்பாக்கி வாங்க முயன்ற மஞ்சுளா மீது சட்டத்தை மீறி ஆயுதம் வாங்க முயன்றதாகவும்,  துப்பாக்கி வாங்கி தருவதாக கூறி 2 லட்சம் பெற்று பொம்மை துப்பாக்கி வாங்கி கொடுத்து மோசடி செய்த பிரசாந்த் மற்றும் சுரேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மஞ்சுளாவின் கணவர் கார்த்திகேயன் விவாகரத்து கேட்டும், மனைவி மஞ்சுளா மீது எழுதி வைத்த சொத்து கேட்டும் நீதிமன்றத்தில் வழக்கு ெதாடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவரையும் கொலை செய்ய திட்டம்
கள்ளக்காதலன் நாகராஜை கொலை செய்ய துப்பாக்கி வாங்க முயன்ற வழக்கில் மின்வாரிய இளநிலை பொறியாளர் மஞ்சுளாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மஞ்சுளா போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு: நான் என் சுகத்துக்காக எனது ஒரே மகனை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன். மகன் இறந்த பிறகு எனது கணவர் கார்த்திகேயன் என்னை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அவர் என்னை காதலித்து திருமணம் செய்ததால் என் மீதுள்ள பாசத்தால் பல லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் எனது பெயரில் எழுதி வைத்தார்.

தற்ேபாது எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனால் அவர் என்னிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதற்கு நான் எனது கணவருடன் சேர்ந்து வாழ்வதாக கூறியுள்ளேன். ஆனால் அவர் என்னிடம் இனி வாழ முடியாது என்று கூறிவிட்டார். மேலும், எனக்கு எழுதி கொடுத்த சொத்தை திரும்பவும் கேட்டு மிரட்டி வருகிறார். நான் தற்போது எனது பெற்றோரின் ஆதரவுமின்றி அனாதையாக உள்ளேன். இதனால் சொத்தை எனது கணவரிடம் எழுதி கொடுக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டேன். ஆனால் அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். என்னை மகனை கொலை செய்த கொலைகாரி என்றும் கூறி வருகிறார். இனி நான் யாருக்காக வாழ போகிறேன்.

எனவே எனது மகன் கொலைக்கு காரணமான கள்ளக்காதலன் நாகராஜ் மற்றும் சொத்தை எழுதி கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் எனது கணவர் கார்த்திகேயனையும் கொலை செய்யவே நான் துப்பாக்கியை வாங்க முடிவு செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்