SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை பைப் வெடிகுண்டு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 3 குற்றவாளிகள் விஜிலென்ஸ் எஸ்.ஐ.க்கு மிரட்டல்

2018-07-13@ 00:53:17

புழல்: புழல் சிறையில் பாலை சோதனை செய்ததால் விஜிலென்ஸ் உதவி ஆய்வாளரை மிரட்டிய மதுரை பைப் வெடிகுண்டு வழக்கு குற்றாவளிகளிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புழல் மத்திய சிறையில் 600க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் மாலை, சிறைக்குள் விஜிலென்ஸ் உதவி ஆய்வாளர் பாண்டியன் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, ஒரு கைதி டீ போடுவதற்கு பால் எடுத்துச்சென்றார். இதைபார்த்த, விஜிலென்ஸ் உதவி ஆய்வாளர் பாண்டியன், பாலில் கஞ்சா அல்லது ஏதேனும் பொருட்களை மறைத்து வைத்து எடுத்து செல்கிறார்களா என சந்தேகமடைந்த கைதியிடம் இருந்து பாலை வாங்கி சோதனை செய்தார். இதை பார்த்த பிரபல தண்டனை கைதிகளான போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய 3 பேரும், பாண்டியனிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது 3 பேரும், ‘‘எங்களை எந்த சோதனையிலும் ஈடுபடுத்தக்கூடாது. எதுவும் கேட்கக்கூடாது’’ என்று பாண்டியனை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, புழல் சிறை ஜெயிலர் (பொறுப்பு) கோதண்டராமனிடம் விஜிலென்ஸ் உதவி ஆய்வாளர் பாண்டியன் அளித்த புகாரின்பேரில் புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.மதுரையில் பாஜ மூத்த தலைவர் அத்வானியை கொல்வதற்கு பைப் வெடிகுண்டு தயாரித்த வழக்கு, சேலம் ஆடிட்டர் சுரேஷ் கொலை வழக்கு மற்றும் 2015ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியன்று ஜெயிலர் இளவரசன் மற்றும் 4 சிறைக்காவலர்களை அடித்து உதைத்து கலவரம் செய்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 3 பேரும் தொடர்பு உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ்-கைதி மோதல்

போலி பாஸ்போர்ட் வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் கைதான நைஜீரியா நாட்டை சேர்ந்த நிக்கோலஸ் (40) புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவ்வழக்கு தொடர்பாக நிக்கோலசை நேற்று முன்தினம் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு  போலீசார் வேனில் புழல் சிறைக்கு கொண்டு வந்தனர். வழியில் போலீசுக்கும்-நிக்கோலசுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து புழல் சிறைக்குள் நுழையும்போது நிக்கோலஸ் மெயின்கேட்டின் வழியாக உள்ளே அனுமதிக்கப்பட்டு தனியாக நடந்து சென்றான். எனவே, பணியில் இருந்த காவலர் கிருபாகரன் நிக்கோலசை தடுத்து, ‘‘உயர் பாதுகாப்பு பகுதியில் தனியாக செல்லக்கூடாது’’ என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நிக்கோலஸ், காவலர் கிருபாகரனை தகாத வார்த்தையால் திட்டி உள்ளான். எனவே அவனை காவலர் கிருபாகரன் லேசாக தட்டி எச்சரித்து உள்ளார். உடனே, ஆத்திரம் அடைந்த நிக்கோலஸ் காவலர் கிருபாகரனை தாக்கியுள்ளான். இதை பார்த்த மற்ற போலீசார் ஓடிவந்து அவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த நிக்கோலசை போலீசார் மீட்டு, சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-02-2019

  19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்