SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் அதிரடி கைது

2018-07-13@ 00:51:37

எண்ணூர்: தூங்கி கொண்டிருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை எண்ணூர் அருகே தாழங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (20). மீனவர். நேற்று முன்தினம் இரவு ராஜேஷ், அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று, மதுஅருந்திவிட்டு போதையில், வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில், காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தனர். அந்த வீட்டில் நுழைந்த ராஜேஷ், அங்கு படுத்திருந்த 16 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அந்த சிறுமி அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கிருந்த ராஜேஷை பிடித்து தர்மஅடி கொடுத்து, எண்ணூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷை கைது செய்தனர். பின்னர் அவரை, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்