SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மாணவி பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

2018-07-13@ 00:51:10

சென்னை: கல்லூரி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சீதாராமன் (23). இவர் கல்லூரி மாணவி எழிலரசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு எழிலரசியை வெளியே அழைத்து செல்வதாக கூறி திருப்பதிக்கு சீதாராமன் அழைத்து சென்றுள்ளார். பின்னர், ஆசை வார்த்தைகள் கூறி வலுகட்டாயமாக கழுத்தில் தாலியும் கட்டியுள்ளார். இதுகுறித்து, எழிலரசி கேட்டபோது, ‘‘இது என்னுடைய நீண்ட நாள் ஆசை, அதனால் தான் உன்னை என் மனைவியாக்கினேன்’’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, திருப்பதியில் இருந்து எழிலரசியை திருவொற்றியூருக்கு அழைத்து வந்த சீதாராமன், ‘‘நீயும் நானும் கணவன், மனைவி’’ என்று கூறி எழிலரிசியை ஒரு பாழடைந்த வீட்டில் வைத்து வலுகட்டாயமாக உடலுறவு வைத்துள்ளார். இந்தநிலையில், எழிலரசியின் பெற்றோர் மகளை காணவில்லை என்று சென்னை துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடினர். அதில், இருவரும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் வாலிபர் சீதாராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘இந்த வழக்கில் பாதிக்கப்பட்டுள்ளவர் மைனர் பெண், அவரை வாலிபர் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இதனால் அந்த பெண் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வாலிபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு ஒரு வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும், மற்றோரு வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று கூறி உத்தரவிட்டார். சிறை தண்டனை ஏக காலத்தில் சீதாராமன் அனுபவிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்