SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சென்னையில் ஒரே நாளில் பயங்கரம் ரியல் எஸ்டேட் அதிபர் பிரபல ரவுடி படுகொலை

2018-07-13@ 00:50:20

சென்னை: சென்னையில் ஒரே நாளில் ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் பிரபல ரவுடி ஆகியோர் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடையாறு, தாமோதிரபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (40). ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். இவரது மனைவி கலைவாணி (35). தம்பதியின் மகன் கார்த்திகேயன் இந்திரா நகர் தனியார் பள்ளியில் படித்து வருகிறான். மகள் சாய்பிரதா அதேப் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறாள். நேற்று காலை 9 மணியளவில், சுரேஷ் தனது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். 1வது மெயின்ரோடு வந்தபோது ஆட்டோ மற்றும் பைக்கில் வந்த 7 பேர் திடீரென சுரேஷின் பைக்கை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில், பலத்த காயமடைந்த சுரேஷ் பரிதாபமாக பலியானார். சுரேஷ் இறந்ததை உறுதி செய்த 7 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

தகவலறிந்து வந்த அடையாறு போலீசார், சுரேஷின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக அடையாறு, மல்லிகை பூ நகரில் சுரேஷ் குடும்பத்தினருடன் வசித்துள்ளார். அப்போது, இவரது குடும்பத்தாருக்கும் அதே பகுதி சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜயமூர்த்திக்கும் கோயில் நிர்வாகத்தை நடத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறில் சுரேஷ் குடும்பத்தினருடன் சேர்ந்து விஜயமூர்த்தியை கொலை செய்துள்ளனர். எனவே, இதுதொடர்பாக விஜயமூர்த்தியின் நண்பர்களும், சுரேஷ் குடும்பத்தினரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால், சுரேஷ் குடும்பத்தினர் அனைவரும் வீட்டை காலி செய்துவிட்டு வெவ்வேறு பகுதியில் குடியேறினர்.

சுரேஷ் பெசன்ட் நகர் வண்ணான்துறை ஆகிய பகுதிகளில் வசித்து உள்ளார். இதற்கிடையே சுரேஷ் மீது அடையாறு காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு ஒன்றும் பதிவாகி உள்ளது. இவ்வாறு, விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே விஜயமூர்த்தி கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்க சுரேஷ் கொலை செய்யப்பட்டாரா? வேறு காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: சென்னை பெருங்குடி, கல்லுக்குட்டையை சேர்ந்தவர் தனசேகர் (40). பிரபல ரவுடி. தனசேகர் மீது  துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன்தினம் மாலை அடையாறு துணை கமிஷனர் சேஷன்சாய் முன்னிலையில் தனசேகர்  கையெழுத்து போட்டுவிட்டு, திருவான்மியூர் அவ்வை நகரில் இருக்கும் தனது நண்பர் வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, 2 பைக்குகளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென தனசேகரை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனசேகரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் ரத்தவெள்ளத்தில் தனசேகர் இறந்துவிட்டார்.

இதுகுறித்து, திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்தனர். அதில், ‘‘கடந்த 2013ம் ஆண்டு தனசேகர் மனைவி பவானியை மதன் என்பவர் கிண்டல் செய்ததால், ஆத்திரம் அடைந்த தனசேகர் மதனை வெட்டி கொன்றுள்ளார். இதற்கு பழிக்குபழி தீர்க்கும் வகையில் மதன் நண்பர்களான பெருங்குடி அரிசி ராஜா (29), பாரதி (28), வெள்ளை சங்கர் ஆகியோர் தலைமையிலான 5 பேர் சேர்ந்து தனசேகரை வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசி ராஜா மற்றும் பாரதி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-09-2018

  24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-09-2018

  23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-09-2018

  22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்