SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கறிக்கோழி விற்பனை 70% சரிவு விலையும் குறைந்தது

2018-07-13@ 00:46:52

கோவை : கேரளாவில் பெய்து வரும் மழையால் கறிக்கோழி நுகர்வு குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்படும் கறிக்கோழிகள் 70 சதவீதம் குறைந்து தேக்கம் அடைந்துள்ளது. இதனால் கிலோவுக்கு ரூ50 குறைந்து, ரூ155க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட கறிக்கோழி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் மூலம் கறிக்கோழிகளை வளர்த்து, வாரத்திற்கு சராசரியாக 70 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்கின்றனர். இதில் வாரம்தோறும் 30 லட்சம் கறிக்கோழிகள் கேரளாவிற்கும், 40 லட்சம் கறிக்கோழிகள் தமிழகத்திலும் விற்பனையாகிறது.

இந்நிலையில், கேரளாவில் கடந்த 2 வாரமாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் அங்கு கறிக்கோழி நுகர்வு வெகுவாக குறைந்துள்ளது. வாரத்திற்கு 21 லட்சம் குறைந்து 9  லட்சம் மட்டுமே விற்பனையாகிறது. இதனால் தமிழகத்தில் உற்பத்தியாகும் கறிக்கோழிகள் கடந்த ஒரு வாரமாக தேக்கமடைந்து, தமிழகத்தில் விலை சரிந்து வருகிறது. கடந்த 2ம் தேதி தமிழகத்தில் உள்ள கறிக்கோழி பண்ணைகளில் மொத்த கொள்முதல் விலை ஒரு கிலோ உயிருடன் ரூ101க்கும், 3ம் தேதி ரூ96க்கும், 5ம் தேதி ரூ90க்கும், 7ம் தேதி ரூ84க்கும், கடந்த 9ம் தேதி ரூ76க்கும், நேற்றுமுன்தினம் ரூ72க்கும் விற்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மொத்த விலை கிலோவிற்கு ரூ29 சரிந்துள்ளது. அதே போல் சில்லரை விற்பனை நிலையங்களில் கடந்த 2ம் தேதி உரித்த கறிக்கோழி கிலோ ரூ205க்கும், 3ம் தேதி ரூ190க்கும், 5ம் தேதி ரூ185க்கும், 7ம் தேதி ரூ175க்கும், 10ம் தேதி ரூ162க்கும், நேற்று ரூ155க்கும் விற்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் சில்லரை விற்பனையில் உரித்த கோழி கிலோவிற்கு ரூ50 சரிந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்