SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை கல்லூரியில் பேரிடர் மேலாண்ம பயிற்சியின் போது 2வது மாடியில் இருந்து பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் கல்லூரி மாணவி பலி

2018-07-13@ 00:46:27

கோவை: பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது இரண்டாவது மாடியில் இருந்து பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் கோவை கல்லூரி மாணவி தலையில் அடிபட்டு பலியானார். கோவை நரசீபுரத்தில் இயங்கி வரும் கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் ஆண்டுதோறும் என்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முகாம் 3 குழுக்களாக நேற்று தொடங்கியது.  திருநெல்வேலியை சேர்ந்த தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகம் தலைமையில் 3 பேர், மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பேரிடர் மேலாண்மை பயிற்சியின் ஒரு பகுதியாக ஆபத்து காலங்களில் எவ்வாறு தப்பிப்பது, தீ விபத்து அல்லது பூகம்பம் வந்தால் கட்டிட இடிபாடுகளில் இருந்து எவ்வாறுதப்பிப்பது என்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்காக கல்லூரியில் உள்ள 3 மாடி கட்டிடத்தின் 2வது மாடியில் இருந்து கீழே குதிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் 7 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 2வது மாடியில் இருந்து பயிற்சியாளர் ஆறுமுகத்தின் ஆலோசனைப்படி மாணவர்கள் கீழே குதிக்க வேண்டும். அப்படி குதிக்கும் மாணவர்களை பிடித்துக்கொள்ள, 20 மாணவர்கள் கீழே வலையை பிடித்துக்கொண்டு தயாராக இருந்தனர். இதில் 4 மாணவர்கள் 2வது மாடியில் இருந்து குதித்தனர். அவர்கள் வலையில் விழுந்து பத்திரமாக தப்பினர். இதையடுத்து, 2ம் ஆண்டு பிபிஏ படிக்கும், நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்த நல்லாகவுண்டரின் மகள் லோகேஸ்வரி(19) பயிற்சிக்காக குதிக்க  வந்தார். 2வது மாடியின் சன்ஷேடில் இருந்து கீழே குதிப்பதற்கு தயாராகி கொண்டிருந்தார். அப்போது கீழே நின்ற மாணவர்கள் வலையை விரித்து வைத்துக்கொண்டு தயாராக நின்றிருந்தனர்.

ஆனால், மாணவி லோகேஸ்வரி கீழே குதிக்க தயங்கி சன்ஷேடில் அமர்ந்துகொண்டார். அவருக்கு பயிற்சியாளர் ஆறுமுகம் தைரியம் ஏற்படுத்தி கீழே குதிக்கக் கூறினார். இருந்தாலும் தயங்கி கொண்டே இருந்த மாணவியை திடீர் என பயிற்சியாளர் ஆறுமுகம் பிடித்து கீழே தள்ளினார். இதை சற்றும் எதிர்பார்க்காத லோகேஸ்வரி கீழே விழும்போது முதல்மாடி சன்ஷேடில் தலை மோதி, வலையில் ரத்தவெள்ளத்தில் விழுந்தார். இதில், சன்ஷேடில் தலை மோதியதில் தலை மற்றும் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. இதை பார்த்து அங்கிருந்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்து கதறி துடித்தனர். உடனடியாக மாணவியை மீட்டு, தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே மாணவி உயிரிழந்ததார். இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து பயிற்சியாளர் ஆறுமுகத்தை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் மாணவி பலியான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ModiSalmanDelhi

  சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

 • SuperSnowMoon2k19

  அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

 • 20-02-2019

  20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mallakamb_mumbai

  மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

 • varanasi_modi123

  டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்