SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கம் விலை மேலும் சரிவு ஒரே நாளில் சவரனுக்கு ரூ160 குறைந்தது : இன்னும் விலை குறைய வாய்ப்பு

2018-07-13@ 00:44:57

சென்னை : தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.160 குறைந்தது. இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்க நிலை காணப்பட்டு வந்தது. கடந்த 9ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.23,416க்கும், 10ம் தேதி ரூ.23,320க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2,911க்கும், ஒரு சவரன் ரூ.23,288க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.2,891க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.23,128க்கும் விற்பனையானது.

தொடர்ந்து தங்கம் சவரனுக்கு ரூ.288 அளவுக்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: உலக அளவில் பெரிய அளவில் உள்ள ஆயில் நிறுவனம் ஒன்று பங்கு சந்தையில் நுழைகிறது. இதனால் பெரிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை அதன் பக்கம் திருப்பியுள்ளனர். தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்துள்ளனர். இதன், தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இதனால், தங்கம் விலை குறைந்து வருகிறது. இன்னும் சவரனுக்கு ரூ.200 வரை குறைய வாய்ப்புள்ளது இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்