SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவாகரத்து வழக்கில் ஆஜராக கோர்ட்டுக்கு மனைவியுடன் வந்தவரின் காலை அடித்து முறித்த கணவர் கைது: கோர்ட்டில் பரபரப்பு

2018-07-12@ 21:11:34

துறையூர்: துறையூர் அருகே சிங்களாந்தபுரத்தை சேர்ந்தவர் சத்தியசீலன். இவருக்கும் நாமக்கல் எருமைப்பட்டியை சேர்ந்த முத்துலட்சுமிக்கும் திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. இந்நிலையில் முத்துலட்சுமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்தது தெரியவந்ததால் ஏற்பட்ட தகராறில் திருமணமான 3 மாதத்திலே கணவன், மனைவி பிரிந்துவிட்டனர்.இந்நிலையில் விவாகரத்து கேட்டு துறையூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அனைத்து வாயிதாவுக்கும் ஆஜரான சத்தியசீலன் நேற்று வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்தார். முத்துலெட்சுமி ஏற்கனவே தொடர்பு வைத்திருந்த நீலமேகத்துடன் பைக்கில் கோர்ட்டுக்கு வந்து காத்திருந்தார்.

நீலமேகத்துடன் மனைவி வந்ததால் ஆத்திரமடைந்த சத்தியசீலன், நீலமேகத்திடம் சென்று தகராறு செய்தார். இதில் இருவருக்கும் தகராறு முற்றியதில் சத்தியசீலனும், அவரது உறவினர்களும் சேர்ந்து நீலமேகத்தின் காலில் கட்டையால் அடித்தனர். இதில் அவரது கால் எலும்பு முறிந்தது. இந்த சத்தம் கேட்டு நீதிபதி மற்றும் போலீசார் வெளியே வந்தனர். காயமடைந்த நீலமேகத்தை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.மேலும் துறையூர் போலீசார் சத்தியசீலன், உறவினர் பூபாலன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சத்தியசீலனின் தாய் சரோஜா, தங்கை கவிதா, உறவினர் பூபாலன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து செய்து விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்