பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி: ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் விரைவில் தேர்தல்
2018-07-12@ 21:06:30

புதுடெல்லி: பாஜ ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. இதுதவிர நாடாளுமன்ற தேர்தலும் நெருங்கி வரும் நிலையில், இப்போதிருந்தே தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்க உள்ளார். பாஜ ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த மாநிலங்களில் மீண்டும் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜ உள்ளது. இந்த மாநிலங்களில் பாஜவை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய திட்டமிட்டுள்ளன. எனவே, இந்த தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என தெரிகிறது. இதை எதிர்கொள்ள பாஜ பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது.
மாநில தலைவர் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளார். இந்நிலையில், பாஜவின் செல்வாக்கை உயர்த்தும் வகையில், பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாஜ செல்வாக்கு சரிந்திருந்ததாக கருதப்பட்ட கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மோடியின் பிரசாரத்துக்கு பின் கணிசமாக தொகுதிகளை பாஜ கைப்பற்றியது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுக்கவும், மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் பாஜ திட்டமிட்டுள்ளது. இதற்காக இப்போதிலிருந்தே தேர்தல் பிரசாரத்தை தொடங்க பாஜ தலைமை முடிவு செய்துள்ளது.
அந்தவகையில், 80 எம்பி தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி வருகிற 14ம் தேதி தொடங்குகிறார். பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் பிரதமர், பல்வேறு நலத்திடங்களை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
மேலும் செய்திகள்
உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை சிவகாசி பட்டாசு ஆலைகளுக்கு சிக்கல் தீருமா?: உரிமையாளர்கள், தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு தடை விதிக்க ஐநா.வுக்கு பிரான்ஸ் பரிந்துரை
புல்வாமா தாக்குதலால் ஸ்ரீநகருக்கு விமான டிக்கெட் கட்டணம் உயர்வு: டெல்லியில் இருந்து ரூ24,500
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குரலில் ஐகோர்ட் நீதிபதிகளிடம் பேசியவர் யார்?: விசாரணைக்கு உத்தரவு
ஆந்திரா, தெலங்கானாவில் 10 எம்எல்சி பதவிக்கு மார்ச் 12ல் வாக்குப்பதிவு: 28ம் தேதி வேட்புமனுத்தாக்கல்
2 இளைஞர் காங்கிரசார் படுகொலை மார்க்சிஸ்ட் நிர்வாகிகளுக்கு தொடர்பு: தனிப்படை போலீசார் விசாரணை
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்
டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்